Published : 05 Aug 2025 06:09 AM
Last Updated : 05 Aug 2025 06:09 AM
மேஷம்: நேர்கொண்ட பார்வையுடன் சில முடிவுகள் எடுப்பீர். பிரபலங்கள் உதவுவர். பயணங்கள் சிறப்பாக அமையும். அலுவலகத்தில் மதிப்புயரும். வியாபாரத்தில் பணியாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள்.
ரிஷபம்: பிள்ளைகள் படிப்பு விஷயமாக அலைச்சல் இருக்கும். மனைவிவழியில் விவாதங்கள் வந்துபோகும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரம் லாபம் தரும். உத்தியோக விஷயமாக பயணங்கள் மேற்கொள்வீர்.
மிதுனம்: உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர் யார் என்பதை கண்டறிவீர். பிள்ளைகள் குடும்ப சூழல் அறிந்து செயல்படுவர். பணவரவு உண்டு. வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
கடகம்: தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் கூடும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. வியாபாரத்தில் அலைச்சல், டென்ஷன் விலகும்.
சிம்மம்: புது வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து யோசிப்பீர். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர். வியாபாரத்தில் போட்டிகள் விலகும்.
கன்னி: உறவினர் மத்தியில் மதிக்கப்படுவீர். முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
துலாம்: சுறுசுறுப்புடன் பணிகளை விரைந்து முடிப்பீர். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். உங்களின் ஆரோக்கியம் சீராகும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
விருச்சிகம்: குடும்பத்தில் அமைதி திரும்பும். முக்கிய முடிவுகளை கவனமாக எடுக்க வேண்டும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனைகளை கேட்டு நடக்கவும். அலுவலகத்தில் ஊழியர்களை அனுசரித்து செல்லவும்.
தனுசு: மகனின் படிப்பு விஷயமாக அலைச்சல், டென்ஷன் வரும். குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
மகரம்: குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொள்வீர். பிள்ளைகளால் பெருமையடைவீர். வழக்கில் இருந்த தேக்க நிலை மாறும். வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிட்டும். அலுவலகத்தில் மதிப்பு கூடும்.
கும்பம்: மனைவிவழி உறவினரை அனுசரித்து செல்வீர். வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர். நண்பர் உதவியுடன் வேலை கிட்டும். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் புதிய பதவி கிடைக்கப் பெறுவீர்.
மீனம்: தள்ளிப் போய்கொண்டிருந்த சுபகாரியங்கள் கை கூடி வரும். பணவரவால் வீடு, வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் பங்குதாரர்கள் அனுசரணையாக நடந்து கொள்வர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT