Published : 28 Jul 2025 06:19 AM
Last Updated : 28 Jul 2025 06:19 AM
மேஷம்: வெளியூரில் இருந்து நல்ல செய்திகள் வரும். குடும்பத்தினரின் ஆசைகள், விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
ரிஷபம்: வீட்டு உபயோகப் பொருட்கள், மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு, மகிழ்ச்சி திரும்பும். நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார்.
மிதுனம்: குடும்பத்தில் கலந்துபேசி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பை உணர்ந்து நடப்பார்கள். நண்பர்கள் உங்களை புரிந்துகொள்வார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.
கடகம்: சிக்கனமாக இருக்க நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சொந்த பந்தங்களால் அன்பு தொல்லைகள் உண்டு. வாகனத்தில் இருந்த பழுது நீங்கும். பேச்சில் பொறுமை தேவை.
சிம்மம்: கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகளுக்கு இடம்தராமல் மனம்விட்டு பேசுவீர்கள். திடீர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். மருத்துவ செலவு குறையும். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.
கன்னி: விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். தங்கம், வெள்ளி ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.
துலாம்: எதிர்பாராத பண வரவால், பழைய கடனை பைசல் செய்வீர்கள். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். அலுவலகத்தில் வேலைச் சுமை குறையும்.
விருச்சிகம்: கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். சகோதர வகையில் இருந்த அலைச்சல் விலகும். பெரிய நிறுவனத்தில் வேலை அமையும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். பங்குதாரர்கள் ஆதரவு உண்டு.
தனுசு: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று நடப்பார்கள். பழுதான வாகனத்தை சரிசெய்வீர்கள். பிள்ளைகளிடம் இருந்த பிடிவாத குணம் மறையும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
மகரம்: புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். அரசு, வங்கி வேலைகள் சாதகமாக முடியும்.
கும்பம்: எதிலும் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வீண், ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்தி, சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் நம்பிக்கையுடன் சமாளிப்பீர்கள்.
மீனம்: தொழில் ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வங்கி கடனுதவி கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் கூடும். வெளியூர் பயணம் உற்சாகம் தரும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT