Published : 22 Jul 2025 06:11 AM
Last Updated : 22 Jul 2025 06:11 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வேற்று மதத்தவர், மொழியினர் உதவுவர். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர். உத்தியோகத்தில் புது பொறுப்பு தேடி வரும். மேலதிகாரி பாராட்டுவார்.

ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். அரசாங்க அதிகாரிகளின் சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் சரக்குகள் விற்று தீரும். உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.

மிதுனம்: எதிர்பாராத செலவுகள் வரும். குடும்பத்தாரின் பேச்சுக்கு மதிப்பளிக்கவும். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பழகவும். வியாபாரத்தில் பணியாட்களின் தொந்தரவு வரலாம். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

கடகம்: பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து காத்திருந்த தொகை கைக்கு வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

சிம்மம்: முகமலர்ச்சியுடன் காணப்படுவீர். நீண்டநாள் விருப்பங்களை பூர்த்தி செய்து கொள்வீர்கள். கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு. வியாபாரம் சூடு பிடித்து லாபம் உண்டு. அலுவலகத்தில் விவாதம் தவிர்க்கவும்.

கன்னி: புது கருத்துகளால் அனைவரையும் வசீகரிப்பீர். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர். பணவரவு உண்டு. தம்பதிக்குள் நெருக்கம் கூடும். முன்கோபம் குறையும். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.

துலாம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு காண்பீர். அலுவலகத்தில் உங்கள் உழைப்புக்கு பாராட்டு கிட்டும். வியாபாரரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்: குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு செயல்படவும். வியாபாரத்தில் வர வேண்டிய பணத்தை மிகவும் போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் முக்கிய கோப்புகளை கவனமாக கையாள்வது நல்லது.

தனுசு: அரசாங்க அதிகாரிகளின் நட்புறவு கிட்டும். உறவினர், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் புது பொறுப்பும், பதவியும் தேடி வரும்.

மகரம்: சொந்த ஊரிலிருந்து நல்ல செய்திகள் தேடி வரும். புது அனுபவம் கிடைக்கும். தாயாரின் உடல்நலம் சீராகும். அலுவலகத்தில் தடைபட்ட பணிகள் முடியும். வியாபார விஷயமாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்.

கும்பம்: பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். குடும்பத்தில் மனநிறைவு கிட்டும். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. அலுவலகத்தில் உயர்பதவி கிடைக்கும்.

மீனம்: இதமான பேச்சுகளால் சில காரியங்களை முடிப்பீர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். பிள்ளைகளால் பெருமையுண்டு. வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களின் ஆதரவை பெறுவீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x