Published : 19 Jul 2025 06:20 AM
Last Updated : 19 Jul 2025 06:20 AM
மேஷம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். குடும்பத்தினரின் ஆலோசனையை கேட்டு செயல்படவும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
ரிஷபம்: புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்துவீர். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். சக ஊழியர்கள் மதிப்பார்கள்.
மிதுனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களின் உதவியை நாடி பழைய நண்பர்கள் வருவர். தாயாரின் மருத்துவ செலவு குறையும். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர்.
கடகம்: பிள்ளைகளின் பாசம் கூடும். உறவினர்களுடன் இருந்த பகை விலகும். தந்தைவழி சொத்து தொடர்பான செலவுகளை கட்டுப்படுத்துவீர். அலுவலகத்தில் உங்கள் அருமை புரியும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
சிம்மம்: சாமர்த்தியமாக செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர். குடும்பத்தில் மதிப்பு கூடும். எதிர்பார்த்த கடனுதவி கிட்டும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்கள்.
கன்னி: சகோதர வகையில் வீண் செலவு, அலைச்சல் வரும். வாகனத்தில் நிதானம் தேவை. வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். உங்கள் உழைப்புக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும்.
துலாம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். பிரபலங்களின் நட்பு கிட்டும். தாயாரின் உடல்நிலை சீராகும். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் கிடைப்பார்கள்.
விருச்சிகம்: பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர். மனைவிவழி உறவினர்கள் தேடி வருவர். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமை வெளிப்படும்.
தனுசு: உங்களின் ஆளுமைத் திறன் கூடும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். மனைவியுடன் இருந்த மோதல்கள் நீங்கும். மாணவர்கள் உற்சாகமாக காணப்படுவார்கள். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
மகரம்: எதிர்பாராத சந்திப்பு நிகழும். சகோதரர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். பால்ய நண்பர்கள் உதவுவர். வியாபாரத்தை விரிவுபடுத்த புது முயற்சி எடுப்பீர். அலுவலகத்தில் வீண் விவாதம் வேண்டாம்.
கும்பம்: தள்ளிப் போய்க் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிக்கு தேதி குறிப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் புதிய பதவி கிடைக்கும்.
மீனம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிட்டும். தெளிவான முடிவுகளால் சுற்றியிருப்பவர்களின் நன்மதிப்பை பெறுவீர். வியாபாரத்தில் பங்குதாரர்கள் வளைந்து கொடுத்து போவர். உத்தியோகம் சிறக்கும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT