Published : 17 Jul 2025 06:24 AM
Last Updated : 17 Jul 2025 06:24 AM
மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். வேற்றுமொழி பேசுபவர்களால் நல்லது நடக்கும். உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர்.
ரிஷபம்: தடைபட்ட வேலைகளை மாறுபட்ட அணுகு முறையால் முடித்து காட்டுவீர். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவர். வியாபாரம், அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.
மிதுனம்: பிரபலங்களுக்கு நெருக்கமாவீர். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர். ஷேர் மூலம் பணம் வரும். முக்கிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் உயரதிகாரி பாராட்டுவார்.
கடகம்: உறவினர் மத்தியில் அந்தஸ்து உயரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். உங்களின் நிர்வாக திறன் கூடும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.
சிம்மம்: பொது விவாதங்களில் வெற்றி பெறுவீர். மன இறுக்கம் நீங்கும். விஐபிகள் மத்தியில் செல்வாக்கு கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அலுவலக ரீதியாக பயணம் செல்வீர். வியாபாரத்தில் லாபமுண்டு.
கன்னி: ஒப்புக் கொண்ட வேலையை முடிக்க அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். பயணங்களின்போது எச்சரிக்கை அவசியம். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
துலாம்: அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகவும். புது வேலையில் சென்று அமர்வீர். நெருங்கிய உறவினர்கள் விரும்பி வந்து பேசுவர். வியாபாரரீதியாக சிலரை சந்திப்பீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
விருச்சிகம்: எதிர்பார்த்த வெளிநாட்டு பயணங்கள் அமையும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். புதிய யுக்திகளை கையாள்வீர். அலுவலகத்தில் யாரையும் பகைத்துத் கொள்ளாதீர்.
தனுசு: பயணங்கள் திருப்தி தரும். பொது அறிவை வளர்த்துக் கொள்வீர். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். யோகா, தியானத்தில் மனம் செல்லும். வியாபாரம் சிறக்கும். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.
மகரம்: செயலில் வேகம் கூடும். பழைய வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர். பணப்பற்றாக் குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
கும்பம்: வேற்று மொழி, மதத்தினர்களால் திருப்பம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயமுண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். தலைமையிடத்தின் கவனத்தைப் பெற்றதால் அலுவலகத்தில் மதிப்புயரும்.
மீனம்: முன்கோபத்தை தவிர்த்து அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். குடும்பத்தில் நிம்மதியுண்டு. வியாபாரத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் யாரை பற்றியும் குறை கூற வேண்டாம். விவாதம் தவிர்ப்பீர்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT