Published : 16 Jul 2025 06:29 AM
Last Updated : 16 Jul 2025 06:29 AM
மேஷம்: நீண்ட நாட்களாகத் தடைபட்டு கொண்டிருந்த திருமண பேச்சுவார்த்தை கைகூடி வரும். ஓரளவு பணவரவு உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீக சொத்தை சீர்திருத்தம் செய்வீர்கள்.
ரிஷபம்: நினைத்த காரியங்கள் நிறைவேறும். புது முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் விலகும். வீண் அலைச்சல் குறையும். வியாபார ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்வீர்கள்.
மிதுனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு, மரியாதை கூடும். எதிர்பாராத பதவிகள் தேடி வரும். மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை உண்டு. தாயார் ஆதரவாக இருப்பார்.
கடகம்: வீட்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு சுபகாரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
சிம்மம்: காரியத்தடைகள், அலைச்சல் வந்து போகும். குடும்பத்தினரால் வீண் செலவு ஏற்படும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
கன்னி: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். அழகு, இளமை கூடும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கு ஏற்பாடாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.
துலாம்: எந்தப் பிரச்சினையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். சிலர் பழைய வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள்.
விருச்சிகம்: குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் நீங்கி நிம்மதி பிறக்கும். ஆடம்பரச்செலவுகளை குறைத்து வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.
தனுசு: சாதுர்யமாக பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.தயாரின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
மகரம்: சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த ஈகோ பிரச்சினைகள் நீங்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.
கும்பம்: கடந்தகால இனிய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்கள் உங்களிடம் அன்பாக இருப்பார்கள். சிலருக்கு நல்ல நிறுவனததில் வேலை கிடைக்கும். பணவரவு திருப்தி தரும்.
மீனம்: கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். உடல்சோர்வு, அலைச்சல் வந்து போகும். அக்கம்பக்கத்தினரின் தொந்தரவு உண்டு. எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கும் சூழல் ஏற்படும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT