Published : 14 Jul 2025 06:14 AM
Last Updated : 14 Jul 2025 06:14 AM
மேஷம்: தடைகள், இடையூறுகளை பொருட்படுத்தாமல் உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சேமிப்பு அதிகரிக்கும். சகோதர சகோதரிகளின் ஆதரவு உண்டு. தொழில், வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.
ரிஷபம்: பல வகையிலும் வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. மனைவி வழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். பல் வலி, வயிற்று வலி குணமாகும்.
மிதுனம்: புதிய நபர்கள், வெளி மாநிலத்தினரால் ஆதாயம், அனுகூலம் உண்டு. பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். குழப்பங்கள் விலகும். உடல்நலம் சீராகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
கடகம்: உறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீடு களைகட்டும். பிள்ளைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்தி தரும். குடும்பத்தினர் ஒத்தாசையாக இருப்பார்கள்.
சிம்மம்: பிள்ளைகளால் வெளியூர் பயணம், அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வாயு கோளாறு, சளி தொந்தரவு வந்து நீங்கும். ஆன்மிகம், தியானம், யோகாவில் ஈடுபாடு ஏற்படும்.
கன்னி: விலகி சென்ற உறவினர்கள், நண்பர்கள் விரும்பி வருவார்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலக ரீதியாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
துலாம்: எதிர்மறை எண்ணங்கள் மறைந்து, நம்பிக்கை, தைரியம் பிறக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் கூடும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். புதியவர்களுடன் நட்பு மலரும்.
விருச்சிகம்: வீண் அச்சம், கவலை, குழப்பம் விலகும். வெளியூர் பயணம் திருப்தி தரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் கூடும். பணவரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரியின் ஆதரவு உண்டு.
தனுசு: குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். சலசலப்புகள் ஓய்ந்து மகிழ்ச்சி திரும்பும். எல்லாவற்றுக்கும் அடுத்தவரை குறை கூறாதீர்கள். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்லுங்கள். பயணத்தில் கவனம் தேவை.
மகரம்: வீண் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். உடல்நலம் சீராகும். ஆடம்பர செலவை குறைத்து சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். மனதுக்கு பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
கும்பம்: வீண் அலைச்சல், டென்ஷன் வந்து நீங்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். வாகன பயணத்தில் கவனம் தேவை. பொருட்கள் சேரும்.
மீனம்: கணவன் - மனைவிக்குள் மனம்விட்டு பேசுவீர்கள். நீண்ட நாள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பீர்கள். குழப்பங்கள் விலகும். திடீர் பணவரவு உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT