Published : 12 Jul 2025 06:26 AM
Last Updated : 12 Jul 2025 06:26 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: குடும்பத்தில் சொத்து பிரச்சினைகள் ஓயும். பெற்றோரின் பேச்சுக்கு மதிப்பளிக்கவும். பணவரவு உண்டு. அலுவலகரீதியாக பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்.

ரிஷபம்: திறமையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர். மனக்குழப்பங்கள் நீங்கும். தம்பதிக்குள் அன்யோன்யம் உண்டு. வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிட்டும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

மிதுனம்: முன்கோபம், டென்ஷன் அதிகரிக்கும். பழைய பிரச்சினைகளை நினைத்து வருந்தாதீர். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.

கடகம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வீட்டில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும். விருந்தினர் வருகை உண்டு. வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.

சிம்மம்: மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

கன்னி: தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர் களிடையே இருந்த கருத்துவேறுபாடு நீங்கும். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.

துலாம்: நெடுநாட்களாக தடைபட்டு வந்த காரியங்கள் இன்று சுமுகமாக முடியும். கணவன் மனைவிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை நீங்கும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர். உத்தியோகம் சிறக்கும்.

விருச்சிகம்: குடும்பத்திலுள்ளவர்களிடம் மனம் விட்டுப்பேசுவீர்கள். பிரியமானவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலக ரீதியாக இருந்த குழப்பம் நீங்கி, மனதில் நிம்மதியுண்டு.

தனுசு: எதிர்பாராத பணவரவு இருக்கும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். பழைய கடன் பிரச்சினையை தீர்க்க வழி பிறக்கும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

மகரம்: யாருக்கும், எதற்காகவும் உறுதிமொழி தர வேண்டாம். திடீர் செலவு இருக்கும். குடும்பத்துடன் புண்ணிய தலங்களுக்குச் செல்வீர்கள். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

கும்பம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர். வீடு கட்ட வங்கிக் கடனுதவி கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு உண்டு. அலுவலகத்தில் புதிய பதவி கிடைத்து பொறுப்புகள் கூடும். வியாபாரம் ஓரளவு லாபம் தரும்.

மீனம்: தடைபட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல
நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அலுவலகரீதியான பயணம் சாதகமாகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x