Published : 11 Jul 2025 06:35 AM
Last Updated : 11 Jul 2025 06:35 AM
மேஷம்: அடிமனதிலிருந்த பயம் விலகி துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர். அலைச்சல் தந்த பணிகளை உடனே முடிப்பீர். தம்பதிக்குள் அனுசரித்து போவீர்கள். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
ரிஷபம்: வீண் செலவுகளை கட்டுப்படுத்துவீர். அதிரடி திட்டங்களை தீட்டுவீர். பணவரவு உண்டு. உங்களை தேடி வந்து சிலர் உதவி கேட்பர். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். உத்தியோகம் சிறக்கும்.
மிதுனம்: நீங்கள் நல்லது சொல்லப் போய் சிலர் தவறாக புரிந்து கொள்வர். உடல்நலத்தில் அக்கறை காட்டவும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு. எதிலும் கவனமாக இருப்பது நல்லது.
கடகம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர். உங்களிடம் சிலர் உதவி கேட்பர். ஆன்மிகவாதிகளை சந்திப்பீர். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் ஆதரவு தருவர். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
சிம்மம்: மனதுக்கு பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர். பணப் பற்றாக்குறை விலகும். மனநிறைவுடன் சில வேலைகளை செய்து முடிப்பீர். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.
கன்னி: குடும்பத்தில் குழப்பம் நீங்கும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர். தந்தைவழி சொத்து கைக்கு வரும். வியாபாரத்தில் லாபமுண்டு. உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
துலாம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகம், வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். வியாபாரரீதியாக பிரபலங்களை சந்திப்பீர்கள்.
விருச்சிகம்: தம்பதிக்குள் அனுசரித்து போவது நல்லது. அடிமனதில் இருந்த பயம் நீங்கி துணிச்சலாக சில முடிவு எடுப்பீர். அலுவலகத்தில் எதிலும் உங்கள் கை ஓங்கும். வியாபாரத்தில் லாபமுண்டு. பங்குதாரர் ஆதரவு தருவார்.
தனுசு: குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர். பணவரவு உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். தந்தையின் உடல்நிலை சீராகும். அண்டை வீட்டாரின் ஆதரவு கிட்டும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
மகரம்: பழைய பிரச்சினைகள் தலை தூக்கும். வீண் பயம், கவலைகள் வரும். குடும்பத்தில் விட்டு கொடுத்து போகவும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
கும்பம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்தி தரும். தந்தைவழி சொத்துகள் வந்து சேரும். வியாபாரத்தில் வலிய வந்து சிலர் உதவி கேட்பார்கள். அலுவலகத்தில் புதிய பதவிக்கு தேர்வு செய்யப்படுவீர்.
மீனம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். மனதில் தெளிவு பிறக்கும். வீண் செலவுகள் குறையும். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். வியாபாரம், அலுவலகத்தில் விவாதம் தவிர்ப்பீர்கள்.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT