Published : 10 Jul 2025 06:09 AM
Last Updated : 10 Jul 2025 06:09 AM
மேஷம்: மனதுக்கு பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வீட்டில் நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும். வியாபாரரீதியாக சில முடிவுகளை எடுப்பீர். உத்தியோகம் சிறக்கும்.
ரிஷபம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர். அலுவலகத்தில் பொறுப்பு, பதவி தேடி வரும். பிரபலங்கள் அறிமுகமாவர். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வியாபாரம் லாபம் தரும்.
மிதுனம்: மறைமுக அவமானம் ஏற்படக் கூடும். பழைய கடன் சுமையை நினைத்து அவ்வப்போது வருந்துவீர். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் விரும்பிய இடமாற்றமுண்டு.
கடகம்: குடும்பத்தில் குழப்பம் நீங்கி நிம்மதி உண்டு. பழைய நினைவுகள் மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பர். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.
சிம்மம்: சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். தம்பதிக்குள் இருந்த சங்கடங்கள் நீங்கும். அலுவலகரீதியாக பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் லாபத்தை பெருக்க புதிய வழி கிட்டும்.
கன்னி: சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர். கணவன்-மனைவிக்குள் நிம்மதியுண்டு. பணப்புழக்கம் கூடும். வியாபாரரீதியான பயணங்களால் ஆதாயம் உண்டு. அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.
துலாம்: சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். குடும்பத்தில் இருந்த சலசலப்புகள் நீங்கி கனிவான பேச்சுவார்த்தை இருக்கும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர். உத்தியோகத்தில் மதிப்பு உயரும்.
விருச்சிகம்: நினைத்த காரியங்கள் நிறைவேறும். புது முயற்சிகளில் வெற்றி காண்பீர். தம்பதிக்குள் இருந்த கசப்புகள் விலகும். வியாபாரரீதியாக வெளியூர் செல்வீர். அலுவலகத்தில் அனைத்திலும் உங்கள் கை ஓங்கும்.
தனுசு: திடீர் பயணங்கள், ஆழ்ந்த உறக்கமின்மை வந்து செல்லும். உடன்பிறந்தவர்களால் சங்கடங்கள் வரும். அரசு விவகாரங்களில் அலட்சியம் கூடாது. வியாபாரம், உத்தியோகத்தில் அதிரடியான முடிவுகளை எடுக்காதீர்.
மகரம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவர். ஓரளவு லாபமுண்டு. அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
கும்பம்: பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த தீவிர ஆலோசனை செய்வீர். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் புதிய பதவி கிடைத்து பொறுப்பு கூடும்.
மீனம்: பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க எண்ணுவீர். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் உண்டு. அலுவலகத்தில் யாரைப் பற்றியும் தலைமையிடத்தில் குறை கூறாதீர்கள்.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT