Published : 09 Jul 2025 06:23 AM
Last Updated : 09 Jul 2025 06:23 AM
மேஷம்: தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர். ஆடம்பர செலவுகளை குறைப்பீர். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.
ரிஷபம்: ஒருவித படபடப்பு வரும். தம்பதிக்குள் இருக்கும் ஈகோ பிரச்சினைக்கு தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் போராடி பாக்கிகளை வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். மதிப்பு உயரும்.
மிதுனம்: பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். நட்பு வட்டம் விரியும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகம் சிறக்கும்.
கடகம்: எதிரிகளை சமாளிப்பீர். கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு. விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரரீதியான பயணம் திருப்தி தரும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
சிம்மம்: உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணர்வீர். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும். நல்ல லாபம் உண்டு. அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும்.
கன்னி: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வீண் அலைச்சல்களிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
துலாம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதரர்களின் கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் உங்கள் அருமை இப்போது தெரியும்.
விருச்சிகம்: குடும்பத்தினர் மத்தியில் மதிப்பு உயரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரம் சிறக்கும். பங்குதாரர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
தனுசு: எந்த காரியத்தை தொட்டாலும் பல முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்து கொள்வர். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
மகரம்: குடும்பத்தில் பழைய பொருட்களை மாற்றுவீர். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வீண் அலைச்சல் குறையும். வியாபாரம் லாபம் தரும். அலுவலகரீதியாக பிரபலங்களை சந்திப்பீர்கள்.
கும்பம்: சோர்வாக இருந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர். சிந்தனைத் திறன் கூடும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் வியக்கத்தக்க லாபம் உண்டு. அலுவலகத்தில் புதிய பதவி கிடைக்கும்.
மீனம்: சகோதரர்கள் உறுதுணையாக இருப்பர். கம்பீரமாக பேசி காரியங்களை முடிப்பீர். சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். வியாபார நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் குறை கூறாதீர்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT