Published : 03 Jul 2025 06:29 AM
Last Updated : 03 Jul 2025 06:29 AM
மேஷம்: பணப் பற்றாக்குறை விலகும். மனதுக்கு பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தாயின் உடல் நலம் சீராகும். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
ரிஷபம்: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர். தம்பதிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.
மிதுனம்: பணவரவு உண்டு. குடும்பத்துடன் சென்று குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
கடகம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். சேமிப்பு கூடும். பங்குதாரர்களின் ஆலோசனைப்படி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். பழைய சிக்கல்கள் விலகும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பர்.
சிம்மம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு இழுபறி வேலையை முடிப்பீர். வியாபாரம் நல்ல லாபம் தரும். அலுவலகத்தில் விரும்பிய இடத்துக்கு மாற்றல் கிட்டும்.
கன்னி: திட்டமிட்ட வேலையை முடிக்க முடியாமல் கோபம் வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வியாபாரத்தில் போட்டி உண்டு. உத்தியோகத்தில் பணிச் சுமை கூடும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்.
துலாம்: தாய்வழி உறவினர்கள் மதிப்பர். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர். உத்தியோகம் சிறக்கும்.
விருச்சிகம்: புதிய கோணத்தில் சிந்தித்து செயல்படுவீர். நண்பர்கள் தேடி வருவர். குடும்பத்தினரால் மனநிம்மதிகிட்டும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில பணிகளை முடிப்பீர். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.
தனுசு: வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். குழப்பம் நீங்கி குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். தாயாரின் உடல் உபாதை நீங்கும். வியாபாரத்தில் சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும்.
மகரம்: முன்கோபத்தை தவிர்த்து அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயல்படுவீர். பிள்ளைகள் நம்பிக்கை தருவர். மனைவியின் உடல்நலம் சீராகும். தொழில் போட்டி குறையும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.
கும்பம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் நிம்மதி பிறக்கும். தலைமையிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள்.
மீனம்: அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடப்பீர்கள். பிள்ளைகளிடம் அநாவசியமாக கோபப்படாதீர். சில பணிகளை போராடி முடிப்பீர். அலுவலகத்தில் யாரை பற்றியும் குறை கூறாதீர். வியாபாரத்தில் ஏற்றம் உண்டு.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT