Published : 02 Jul 2025 06:27 AM
Last Updated : 02 Jul 2025 06:27 AM
மேஷம்: எதிலும் வெற்றி பெறுவீர். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர். அலுவலகரீதியான பயணம் திருப்தி தரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.
ரிஷபம்: எதிர்பார்த்த உதவி கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். குடும்பத்தில் அமைதி நிலவும். உடல் அசதி விலகும். பணவரவு உண்டு. வியாபாரம் ஏற்றம் தரும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
மிதுனம்: முகப்பொலிவு கூடும். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.
கடகம்: சிக்கலான, சவாலான காரியங்களை கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர். நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்காது. உத்தியோகம் சிறக்கும்.
சிம்மம்: தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் தொந்தரவு கூடும். வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிக்க போராடுவீர்கள்.
கன்னி: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். தம்பதிக்குள் இருந்த பிரச்சினை தீரும். சகோதரர்களின் ஆதரவு உண்டு. அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை சீர் செய்வீர். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.
துலாம்: புதிய எலக்ட்ரானிக்ஸ், கலை பொருட்கள் வீடு வந்து சேரும். பழைய சொந்தங்களால் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
விருச்சிகம்: நெடுநாளாக திட்டமிட்ட சிலகாரியங்களை செயல்படுத்திக் காட்டுவீர்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். வியாபாரத்தில் லாபமுண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரியின் ஆதரவு கிட்டும்.
தனுசு: உங்களின் எதிர்காலம் பற்றிய பயம் விலகும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தவும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் பணிச் சுமை குறையும். சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும்.
மகரம்: தைரியமான முடிவு எடுத்து வெற்றி காண்பீர். நீண்ட நாள் கழித்து உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
கும்பம்: வெளுத்ததெல்லாம் பாலாக நினைக்காதீர்கள். கடன் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
மீனம்: மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகை உண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT