Published : 01 Jul 2025 06:13 AM
Last Updated : 01 Jul 2025 06:13 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்து வந்த தொல்லைகள் அகலும். வெளியூர் பயணங்களால் ஆதாயமுண்டு. அலுவலகரீதியாக பிரபலங்களை சந்திப் பீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்.

ரிஷபம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டாரம் விரியும். தாயாரின் உடல்நிலை சீராகும். வீண் அலைச்சல் குறையும். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும்.

மிதுனம்: தடைபட்டு வந்த காரியங்கள் நிறைவடையும். பிள்ளைகளின் சாதனைகளால் உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரரீதியாக சில பிரபலங்களை சந்திக்க நேரும். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு.

கடகம்: தன்னம்பிக்கை பிறக்கும். பணவரவால் கடனை பைசல் செய்வீர். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். குழப்பங்கள் தீர்ந்து அலுவலகத்தில் நிம்மதி உண்டு.

சிம்மம்: வீடு, வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.

கன்னி: குடும்பத்தினரால் மனநிம்மதி கிட்டும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். அலுவலகத்தில் இழுபறியான பணிகளை முடிப்பீர்கள். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்ப்பீர்.

துலாம்: வீண் செலவுகளை தவிர்ப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் அன்பை பெறுவீர்.

விருச்சிகம்: நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிட்டும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

தனுசு: புத்திசாலித்தனமாக நடந்து கொள்வீர். பழைய நண்பர்கள் தேடி வருவர். வியாபாரரீதியான வெளியூர் பயணங்களால் உற்சாகமடைவீர்கள். அலுவலகத்தில் உயரதிகாரியுடன் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும்.

மகரம்: வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். மகளின் திருமணம் தொடர்பாக குடும்பத்தினருடன் கலந்துரையாடி முடிவு எடுப்பீர்கள். அலுவலகத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.

கும்பம்: முக்கிய முடிவுகளை கவனமாக எடுக்கவும். குடும்பத்தினரை அனுசரித்து நடக்கவும். வியாபாரத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும். இருப்பினும் உழைப்புக்கு தகுந்த அங்கீகாரம் கிட்டும்.

மீனம்: குடும்பத்தினரின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர்கள். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். புதிய நண்பர்களை சந்திப்பீர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x