Published : 30 Jun 2025 05:53 AM
Last Updated : 30 Jun 2025 05:53 AM
மேஷம்: சிறிய வாய்ப்புகளையும் சாதுர்யமாக பயன்படுத்தி, காரியம் சாதிப்பீர்கள். பெற்றோர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும்.
ரிஷபம்: நம்பிக்கை, உற்சாகத்துடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வியாபார ரீதியாக பிரபலங்களை சந்திப்பீர்கள். சேமிப்பு மேலும் அதிகரிக்கும்.
மிதுனம்: எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும். பண வரவு, பொருள் வரவு உண்டாகும். எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சகோதர உறவுகள் பக்கபலமாக இருப்பார்கள்.
கடகம்: பழைய சம்பவங்கள் மகிழ்ச்சி தரும். வழக்குகளில் சாதகமான திருப்பம் வரும். அரசால் அனுகூலம் உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும்.
சிம்மம்: மன இறுக்கம், தேவையற்ற குழப்பம் வந்து போகும். குடும்பத்தில் நிதானத்தை கடைபிடியுங்கள். பயணத்தில் அதிக கவனம் தேவை. நாடி வந்தவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்வீர்கள்.
கன்னி: கல்வித் தகுதி, சிறப்பு திறன்களை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி தங்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பதவி, பொறுப்புகள் தேடி வரும்.
துலாம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். தொழில், வியாபாரத்தில் தேங்கி கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும்.
விருச்சிகம்: தைரியமாக செயல்பட்டு, சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சினைக்கு சுமுக தீர்வு கிடைக்கும்.
தனுசு: சோர்வு, களைப்பு நீங்கும். உற்சாகத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி, அன்யோன்யம் அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும்.
மகரம்: வெளி வட்டாரத்தில் யாரிடமும் வீண் பேச்சு, வாக்குவாதம் வேண்டாம். தொழில், வியாபாரத்தில் நிதானம் தேவை. யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது. பெரிய நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.
கும்பம்: எந்த பிரச்சினை வந்தாலும் எதிர்கொள்ளும் தைரியம் பிறக்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். மனதில் நம்பிக்கை, புது தெம்பு பிறக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பிள்ளைகளால் மனநிம்மதி உண்டு.
மீனம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சகோதர உறவுகள் பக்கபலமாக இருப்பார்கள். நிலம், வீடு வாங்குவது, விற்பது சாதகமாக முடியும். ஆன்மிக நாட்டம் கூடும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT