Published : 28 Jun 2025 06:23 AM
Last Updated : 28 Jun 2025 06:23 AM
மேஷம்: எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிடைக்கும். உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்.
ரிஷபம்: பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். மனவலிமையுடன் எதையும் முடித்து காட்டுவீர். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்.
மிதுனம்: கையில் பணம் புரளும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவர். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்தவர் உங்களை தேடி வருவார். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
கடகம்: பணப் பற்றாக்குறையை சமாளிப்பீர். உங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். அலுவலகத்தில் விரும்பிய இடத்துக்கு மாற்றல் கிட்டும்.
சிம்மம்: முன்கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவர். தெய்வீக ஈடுபாடு கூடும். வியாபாரத்தில் லாபமுண்டு. அலுவலகரீதியாக பயணம் செல்வீர்கள்.
கன்னி: பழைய நண்பர்கள் தேடி வருவர். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பங்குதாரர்களின் ஆலோசனைப்படி வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர். லாபம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு பெருகும்.
துலாம்: தம்பதிக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர். முன்கோபம் விலகும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் கிட்டும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும்.
விருச்சிகம்: மகளுக்கு உடனே திருமணம் கூடி வரும். பிள்ளைகளின் பிடிவாதம் குறைந்து உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பர். வியாபாரத்தில் வராக் கடன் வந்து சேரும். அலுவலக பணிகளில் இருந்த தொய்வு விலகும்.
தனுசு: தம்பதிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. ஆடம்பர செலவால் சேமிப்பு கரையும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
மகரம்: பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். தாய்வழி சொந்தங்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் மதிப்புயரும்.
கும்பம்: விஐபிகளின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபமுண்டு. அலுவலகத்தில் புதிய பதவி கிட்டும்.
மீனம்: பிரபலங்கள் உதவுவர். பயணங்கள் சிறப்பாக அமையும். நேர்கொண்ட பார்வையுடன் முடிவுகள் எடுப்பீர். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் குறை கூற வேண்டாம். வியாபாரத்தில் பணியாட்கள் ஆதரிப்பர்.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT