Published : 27 Jun 2025 06:19 AM
Last Updated : 27 Jun 2025 06:19 AM
மேஷம்: முகத்தில் தெளிவு பிறக்கும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். பங்குதாரர்களின் ஆலோசனையை கேட்டு நடக்கவும். அலுவலகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்.
ரிஷபம்: பழைய கடன்களைத் தீர்க்க வழி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்.
மிதுனம்: சவாலான காரியங்களையும் சாதுர்யமாக முடித்து வெற்றி பெறுவீர்கள். தடைகள் யாவும் நீங்கும். முக்கிய முடிவுகள் எடுப்பீர். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். லாபம் கூடும். உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.
கடகம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். அலுவலகத்தில் டென்ஷன் கூடும். முன்கோபத்தை கட்டுப்படுத்தவும். வியாபாரத்தில் எச்சரிக்கை தேவை.
சிம்மம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். குடும்பத்துடன் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகம் சிறக்கும்.
கன்னி: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். ஆன்மிக நாட்டம் கூடும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவர். வியாபார விஷயமாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்.
துலாம்: நம்பிக்கைக்கு உரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதியுண்டு. வியாபாரத்தில் பழைய பணியாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகரீதியாக திடீர் பயணங்கள் மேற்கொள்வீர்.
விருச்சிகம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர். உறவினர். நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் இருந்த குழப்பங்கள் நீங்கும். அலுவலகத்தில் பணிச்சுமை ஓரளவு குறையும்.
தனுசு: திட்டமிட்ட வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் தடுமாறுவீர்கள். உறவினர்களுடன் நெருடல் வந்து நீங்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரத்தில் பணியாட்களிடம் அன்பாக பேசவும்.
மகரம்: இன்றைய தினம் விஐபிகள் அறிமுகமாவார்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக்கடன் கிடைக்கும். லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும்.
கும்பம்: நெடுநாட்களாக இழுபறியாக இருந்த பணிகள் முடிவுக்கு வரும். மனைவி, தாயாரின் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும்.
மீனம்: மற்றவர்களால் செய்ய முடியாத காரியங்களை முடித்து காட்டுவீர். பிள்ளைகள் பொறுப்புடன் நடப்பர். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்தும் விதமாக வங்கி கடனுதவியை நாடுவீர்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT