Published : 26 Jun 2025 06:22 AM
Last Updated : 26 Jun 2025 06:22 AM
மேஷம்: பழைய நண்பர்கள் தேடி வருவர். தடைபட்ட அரசாங்க வேலைகள் முடியும். குடும்பத்துடன் சென்று சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். பணவரவு மனநிறைவை தரும். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்கள்.
ரிஷபம்: வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். புது வேலை அமையும். பிள்ளைகளால் பெருமையடைவீர். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.
மிதுனம்: பழைய கடன், பகையை நினைத்து பயம் வரும். தெளிவான முடிவு எடுக்க முடியாமல் தவிப்பீர். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகத்தில் போராட்டம் உண்டு.
கடகம்: அரசால் ஆதாயம் உண்டு. ஷேர் மூலம் பணம் வரும். முன்கோபத்தை குறைப்பீர். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவர். அலுவலகத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.
சிம்மம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் வீடு தேடி வருவர். கையில் பணம் புரளும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் தரும். அலுவலகரீதியாக இருந்து வந்த குழப்பம் தீரும்.
கன்னி: பூர்வீக சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழிலில் கடையை விரிவுபடுத்துவீர்.
துலாம்: விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர். நண்பர்கள் உதவுவர். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர். ஆன்மிக நாட்டம் கூடும். வியாபாரத்தில் போட்டி குறையும். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.
விருச்சிகம்: மகனின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவு எடுப்பீர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
தனுசு: சில காரியங்களை முடிப்பதில் தடை இருக்கும். எதிலும் அவசரப்பட வேண்டாம். தொழிலில் நிதானம் தேவை. பங்குதாரர்களின் ஆலோசனைகளை கேட்டு நடக்கவும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.
மகரம்: எதிர்பாராத பயணங்களால் ஆதாயமுண்டு. விஐபிகளின் நட்பு கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். தம்பதிக்குள் இருந்த பிரச்சினை விலகும். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.
கும்பம்: குடும்பம், அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். மாறுபட்ட அணுகுமுறையால் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பீர். வியாபாரரீதியாக பெரியபதவியில் இருப்பவர்களை சந்திப்பீர்கள்.
மீனம்: பேசாமல் இருந்த உறவினர், நண்பர்கள் வலிய வந்து பேசுவர். குரும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT