Published : 25 Jun 2025 06:05 AM
Last Updated : 25 Jun 2025 06:05 AM
மேஷம்: பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருதி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனைவிக்கு இருந்துவந்த சுவாசக் கோளாறு, சைனஸ் பிரச்சினை நீங்கும். வியாபாரத்தில் குறிப்பிடத்தக்க அளவில் லாபம் கிடைக்கும்.
ரிஷபம்: வெளிவட்டாரத்தில் கவுரவப் பதவிகள் தேடி வரும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். வீடு, வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
மிதுனம்: எதிர்மறை எண்ணங்கள் வரக்கூடும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். யாருக்கும் சாட்சி கையெழுத்திடவோ, உத்தரவாதம் தரவோ வேண்டாம். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும்.
கடகம்: புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியா பாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள்.
சிம்மம்: சாதுர்யமாகப் பேசி எல்லோரையும் கவர்ந்து விடுவீர்கள். குடும்பத்தில் நிலவிய குழப்பம் நீங்கி அமைதி திரும்பும். கடன் பிரச்சினைகளில் ஒன்று தீரும். தாயாரின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கன்னி: புது வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழிலில் போட்டிகள் விலகும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.
துலாம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். இழுபறியாக இருந்த வழக்கில் சாதகமாக தீர்ப்பு வரும். விஐபிகளின் அறிமுகம் கிட்டும். பணவரவு உண்டு.
விருச்சிகம்: வீண் அலைச்சல்களும், எதிர்பாராத செலவினங்களும் அதிகரிக்கும். நெருங்கியவரிடம் மனக்குறைகளைச் சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் அகலக் கால் வைக்க வேண்டாம்.
தனுசு: தடைபட்டிருந்த சுபகாரியங்கள் கைகூடி வரும். வீடு தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு சகல வசதிகளுடன் வீடு அமையும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும்.
மகரம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். மனைவிவழி உறவினர்கள் உங்களிடம் உதவி கோருவார்கள். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள். வெளியூர் பயணம் அலைச்சல் தந்தாலும் நன்மை உண்டு.
கும்பம்: பழைய பிரச்சினைகளுக்கு சுமுக முடிவு ஏற்படும். குடும்பச் சூழ்நிலையறிந்து பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். தந்தைவழியில் அனுகூலம் உண்டு. குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
மீனம்: நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும். சமூகத்தில் பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். கலைப்பொருட்கள் சேரும். குடும்பத்தினரின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT