Published : 21 Jun 2025 05:58 AM
Last Updated : 21 Jun 2025 05:58 AM
மேஷம்: அடுத்தவர்கள் மனது காயப்படும்படி பேசாதீர். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க வேண்டி வரும். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.
ரிஷபம்: தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். பணியாட்களின் ஆதரவு உண்டு. அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
மிதுனம்: சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். விஐபிகளின் அறிமுகம் கிட்டும். வங்கி கடனுதவி கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி ஏற்பாடாகும். வியாபாரம் சிறக்கும். உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.
கடகம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர். தாயாருடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர். வியாபாரம், அலுவலகத்தில் எதிர்பார்த்த மாற்றமுண்டு.
சிம்மம்: செலவு குறையும். சவாலான காரியங்களையும் எடுத்து முடிப்பீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரரீதியாக பிரபலங்களின் உதவியை நாடுவீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
கன்னி: குடும்பத்தில் சின்ன சின்ன குழப்பம் நிகழும். கூட்டுத்தொழிலில் மறைமுக எதிர்ப்பு வரக் கூடும். புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலகத்தில் உங்களை குறை கூறுவார்கள்.
துலாம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.
விருச்சிகம்: வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். நேர்மறை சிந்தனைகள் உற்சாகத்தை தரும். வியாபாரரீதியாக பழைய நண்பர்களை சந்திப்பீர். பணியாட்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும்.
தனுசு: மனதுக்கு இதமான செய்திகள் வரும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வராது என்றிருந்த பணம் வரும். தாய்வழி உறவினர்களால் ஆதாயமுண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.
மகரம்: குடும்பத்தாருடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர். சகோதரர்களால் பயனடைவீர். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் வீண் விவாதம் தவிர்ப்பீர்.
கும்பம்: தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்பட்டு சில பிரச்சினைகளை முடிப்பீர். தம்பதிக்குள் இருந்து வந்த சந்தேகம் விலகும். பிள்ளைகள் அன்பாக நடந்து கொள்வர். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
மீனம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் உண்டு. வியாபாரம் லாபம் தரும். அலுவலகப் பணிகள் விரைந்து முடியும்.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT