Published : 20 Jun 2025 06:24 AM
Last Updated : 20 Jun 2025 06:24 AM
மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மனைவிவழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர். அலுவலகத்தில் உங்கள் மீது இருந்த வீண் பழி அகலும். மேலதிகாரி பாராட்டுவார்.
ரிஷபம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். வீட்டில் நிம்மதி பிறக்கும். அரசு காரியங்களில் வெற்றியுண்டு. வியாபாரத்தில் லாபம் திருப்திகரமாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும்.
மிதுனம்: பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
கடகம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராக பேசி காரியம் சாதிப்பீர். சேமிக்கும் அளவுக்கு வருவாய் கூடும். பழுதான சாதனங்களை மாற்றுவீர். அலுவலகத்தில் மகிழ்ச்சியுண்டு. வியாபாரம் சிறக்கும்.
சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பெரிய மனிதர்கள், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிட்டும். எதிர்பார்த்த விலைக்கு பழைய சொத்துகளை விற்பீர். வியாபாரம், அலுவலகத்தில் குழப்பம் விலகும்.
கன்னி: குடும்பத்தில் வீண் விவாதங்கள் வேண்டாம். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. வியாபாரத்தில் போட்டி இருக்கும். அலுவலக ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
துலாம்: சொந்த பந்தங்களிடையே மதிப்பு, மரியாதை கூடும். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரக்கூடும். மூத்த சகோதர சகோதரிகள் பண உதவி செய்வர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பதுநல்லது.
விருச்சிகம்: குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கூடும். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் உடல்நிலை சீராக இருக்கும். வியாபாரத்தில் வராது என்றிருந்த பாக்கி வந்து சேரும். உத்தியோகம் சிறக்கும்.
தனுசு: புதியவர்கள் அறிமுகமாவர். வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர். பூர்வீக சொத்து வழக்குகள் சாதகமாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகம் சிறக்கும். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்.
மகரம்: எதிர்பார்த்த தொகை வந்து சேரும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை அனைவரும் ஏற்று கொள்வர். வியாபாரத்தில் கடையை மாற்றியமைப்பீர். அலுவலக ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
கும்பம்: மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் போக்கில் மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் போட்டி குறையும். அலுவலகத்தில் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிட்டும்.
மீனம்: வெளிவட்டாரத்தில் அநாவசிய பேச்சுகளை தவிர்க்கவும். குடும்பத்தில் மனக்குறைகள் அதிகரிக்கும். பிள்ளைகளால் செலவு உண்டு. வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர். உத்தியோகம் சிறக்கும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT