Published : 19 Jun 2025 06:17 AM
Last Updated : 19 Jun 2025 06:17 AM
மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உடல் நிலை சீராக அமையும். விருந்தினர் வருகையுண்டு. கூட்டுத் தொழிலில் வீண் விவாதங்கள் நீங்கும். லாபம் கூடும். அலுவலகரீதியான பயணம் திருப்திகரமாக அமையும்.
ரிஷபம்: வேற்றுமொழி, மதத்தினரால் ஆதாயமுண்டு. முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிட்டும். குலதெய்வ பிரார்த்தனைகளை குடும்ப உறுப்பினர்களுடன் சென்று நிறைவேற்றுவீர். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
மிதுனம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிட்டும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருவர். அலுவலகத்தில் பிறரைப் பற்றி குறை கூற வேண்டாம்.
கடகம்: உறவினர், நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். வழக்கில் வெற்றி உண்டு. பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
சிம்மம்: சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். யாருக்காகவும் எதற்காகவும் எந்த உறுதி மொழியும் தரவேண்டாம். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் பணியாட்களால் தொல்லைகள் கூடும்.
கன்னி: வீட்டில் குழப்பம் ஏற்படும். எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் கூட இழுபறியாகும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் சிக்கல் வரக் கூடும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
துலாம்: மன இறுக்கம் நீங்கும். குடும்ப குழப்பங்கள் விலகும். குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.
விருச்சிகம்: திட்டமிட்டபடி பணிகளை முடிப்பீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். சகோதரர்கள் உதவிகரமாக இருப்பர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு.
தனுசு: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் அதிகரிக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பர். வியாபாரம், உத்தியோகத்தில் வியக்கத்தக்க மாற்றம் இருக்கும்.
மகரம்: குடும்பத்தினரிடம் மனம் விட்டுப் பேசுவீர். பிரியமானவர்களின் சந்திப்பால் மகிழ்வீர். தலைவலி, தூக்கமின்மை நீங்கும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும்.
கும்பம்: பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர். புது வேலை கிட்டும். தந்தையின் உடல்நலம் சீராகும். நண்பர்கள் தேடி வருவர். தொழிலில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவர். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.
மீனம்: திட்டமிட்ட வேலைகள் இழுபறியில் முடியும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். கடன் பிரச்சினைகளை தீர்க்க வழி கிடைக்கும். வியாபாரத்தில் போட்டி குறையும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT