Published : 17 Jun 2025 06:18 AM
Last Updated : 17 Jun 2025 06:18 AM
மேஷம்: கொடுக்கல் - வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். புதியவர்கள் நண்பர்களாவர். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்கள்.
ரிஷபம்: செலவுகளை குறைத்து சேமிப்பீர்கள். தாய்வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளை தகர்ப்பீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும். மேலதிகாரி பாராட்டுவார்.
மிதுனம்: புது நண்பர்கள் அறிமுகமாவார்கள். கணவன்- மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வாகனப் பழுது நீங்கும். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.
கடகம்: பூர்வீகச் சொத்து சம்பந்தமான வழக்குகளில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவெடுக்கவும். பணவரவு உண்டு. வியாபாரத்தில் கவனமாக இருப்பீர். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
சிம்மம்: கடந்த கால அனுபவங்களை நினைத்து மனதில் மகிழ்ச்சி பொங்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வீடு,வாகனத்தை சீர் செய்வீர். அலுவலக பணிகளை முடிப்பீர். வியாபாரம் சிறக்கும்.
கன்னி: குடும்பத்தில் நிலவி வந்த விவாதம் மறையும். பிள்ளைகளால் பெருமையடைவீர். நல்லவர்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சி செய்வீர். அலுவலகத்தில் உயரதிகாரிகள் நேசக்கரம் நீட்டுவர்.
துலாம்: உடன் பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பர். பழைய சொத்துச் சிக்கலில் ஒன்று தீரும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வியாபாரம் லாபம் தரும். அலுவலக மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள்.
விருச்சிகம்: கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தொழிலில் போட்டி குறையும். லாபம் உண்டு. அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும்.
தனுசு: மனதுக்கு இதமான செய்தி வரும். உடல் சோர்வு, வயிற்று வலி சீராகும். குடும்பத்தில் சந்தோஷம் தங்கும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் பணியாட்கள் ஆதரவாக இருப்பார்கள்.
மகரம்: பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர். சொந்த ஊர் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். சகோதரர்கள் ஆதரவாக இருப்பர். அலுவலகத்தில் தேடிய ஆவணம் கிட்டும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபமுண்டு.
கும்பம்: குடும்பத்தில் மூத்தோர் அறிவுரையை ஏற்பது நல்லது. முன்கோபம் கூடும். திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.
மீனம்: தள்ளி போய் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிகள் கை கூடி வரும். பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிப்பீர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். அலுவலகரீதியான பயணம் திருப்தி தரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT