Published : 14 Jun 2025 06:11 AM
Last Updated : 14 Jun 2025 06:11 AM
மேஷம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரம் ஓரளவு லாபம் தரும். அலுவலகத்தில் வீண் விவாதம் தவிர்ப்பீர்.
ரிஷபம்: தடைபட்டிருந்த காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் நல்ல தீர்வு காண்பீர். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
மிதுனம்: வெளிவட்டாரத்தில் நிதானமாக பழகவும். தம்பதிக்குள் மனக்கசப்புகள் வரக்கூடும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். மேலதிகாரி பாராட்டுவார்.
கடகம்: விலையுயர்ந்த கலை பொருட்களை வாங்குவீர். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பழகுவது நல்லது. வியாபாரத்தில் அதிரடியாக செயல்பட்டு லாபமீட்டுவீர். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.
சிம்மம்: புது சிந்தனையால் மனக்குழப்பங்கள் விலகும். சேமிக்கும் அளவுக்கு பணம் வரும். பூர்வீக சொத்து பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
கன்னி: யோகம் உண்டாகும். உறவினர்கள் உங்களைப் பற்றி பெருமையாக பேசுவர். வீட்டில் சுபநிகழ்ச்சி ஏற்பாடாகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
துலாம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். சிலர் உங்கள் உதவியை நாடுவர். சகோதரர் உங்களை புரிந்து கொள்வார். பங்குதாரர் ஆலோசனையின்படி கடையில் மாற்றங்களை செய்வீர். அலுவலகத்தில் குழப்பம் தீரும்.
விருச்சிகம்: பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். பணவரவு திருப்தி தரும். உறவினர்கள் ஒத்துழைப்பர். அலுவலகத்தில் உயரதிகாரி முக்கிய விஷயங்களை பகிரும் அளவுக்கு நெருக்கமாவீர். வியாபாரம் சிறக்கும்.
தனுசு: தாயாரின் மருத்துவ செலவுகள் குறையும். உடன்பிறந்தோர் ஒத்தாசையாக நடந்து கொள்வார்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் முன்னேற்றமுண்டு.
மகரம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பான கவலைகள் இருக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும் வியாபாரத்தில் புது முடிவுகள் எடுக்க வேண்டாம். அலுவலகரீதியான பயணங்கள் அலைச்சல் தரும்.
கும்பம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவர். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.
மீனம்: பழைய பொருட்களை மாற்றிவிட்டு புதியன வாங்குவீர். மனைவி வழியில் ஆதாயம் இருக்கும். வியாபாரத்தில் வராது என்றிருந்த பணம் வந்து சேரும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் குறை கூறாதீர்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT