Published : 12 Jun 2025 06:19 AM
Last Updated : 12 Jun 2025 06:19 AM
மேஷம்: நம்பிக்கைக்கு உரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர். தம்பதிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். நண்பர்கள் வீடு தேடி வருவர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பர்.
ரிஷபம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை விலகும். பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து செயல்படுவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகம் சிறக்கும்.
மிதுனம்: குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர்கள். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கிடைக்கும்.
கடகம்: மறைமுக எதிர்ப்புகள் விலகும். உங்களின் செயலை பார்த்து மற்றவர்கள் வியப்பர். குடும்பத்தில் நிம்மதி தங்கும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். வியாபாரத்தில் புது இடத்துக்கு கடையை மாற்றுவீர்.
சிம்மம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். வியாபாரத்தில் பணியாட்களின் ஆதரவு உண்டு. அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.
கன்னி: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தூக்கமின்மை, மன உளைச்சல் நீங்கும். தாய்வழி உறவினர்கள் உதவி நாடி வருவர். வியாபாரம், அலுவலகத்தில் நிம்மதியுண்டு.
துலாம்: புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். குலதெய்வப் பிரார்த்தனைகள் நிம்மதி தரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு.
விருச்சிகம்: மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். சகோதரர்களால் ஆதாயமுண்டு. தாயாரின் உடல்நலம் நிம்மதி தரும். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் நிதானமாக செயல்படவும்.
தனுசு: முன்கோபம், டென்ஷன் இருக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும் பிள்ளைகளால் செலவு ஏற்படும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.
மகரம்: உங்களின் அணுகுமுறையை மாற்றி தடைபட்ட வேலையை முடிப்பீர்கள். சகோதரியின் விசேஷத்துக்கு அதிகம் உழைப்பீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும்.
கும்பம்: மற்றவர்களின் ரசனைக்கேற்ப செயல்படுவீர். உறவினர்கள் உங்களை பெருமையாக பார்ப்பார்கள். ஊர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குவீர். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் புதிய பதவி கிடைக்கும்.
மீனம்: தெளிவாக பேசி சில வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வங்கிக்கடனை பைசல் செய்வீர். அலுவலகத்தில் நிம்மதி கிட்டும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT