Published : 11 Jun 2025 06:20 AM
Last Updated : 11 Jun 2025 06:20 AM
மேஷம்: குடும்பத்தாரின் ஆதரவு அதிகரிக்கும். செலவு களைக் குறைத்து சேமிக்கும் எண்ணம் தோன்றும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வியாபாரத்தில் வேற்றுமொழி வாடிக்கையாளர்கள் வருவார்கள்.
ரிஷபம்: வீண் அலைச்சல், காரியத் தடைகள் வரக் கூடும். வெளிவட்டாரத்தில் நிதானம் தேவை. அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. யோகா, ஆன்மிகத்தில் மனதைச் செலுத்துவது நல்லது.
மிதுனம்: நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். குடும்பத்துடன் புண்ணிய தலங்களுக்கு செல்ல திட்டமிடுவீர்கள். உத்தி யோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
கடகம்: அரசு காரியங்களில் இருந்துவந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பயணங் கள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மூத்த சகோதரர் உங்கள் உதவியை நாடுவார்.
சிம்மம்: நீண்டநாட்களாக விலகியிருந்த உறவினர்கள், நண்பர்கள் மீண்டும் வருவார்கள். கணவன் - மனைவிக் குள் அன்யோன்யம் அதிகரிக்கும். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள்.
கன்னி: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக் கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவுக்கு வரும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.
துலாம்: நீண்டகாலக் கடன்களை பைசல் செய்வீர்கள். தாய்வழி உறவினர்கள் மத்தியில் மரியாதை அதிகரிக்கும். வியாபாரத்தில் காணப்பட்ட சுணக்கம் நீங்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.
விருச்சிகம்: குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தாய்வழி உறவினர் களால் அலைச்சல் இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள்.
தனுசு: தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் குதூகலமான சூழல் காணப்படும். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு செவிசாய்ப்பார்கள். இரவு நேரப் பயணங்களில் கூடுதல் கவனம் தேவை.
மகரம்: வெளிவட்டாரத்தில் கவுரவப் பதவிகள் தேடி வரும். மனைவிவழி உறவினர்களால் சில காரியங்கள் நிறைவேறும். புது வேலை அமையும். அரசால் அனு கூலம் உண்டு. கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.
கும்பம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். அக்கம் பக்கத்தினர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும்.
மீனம்: எடுத்த வேலையை எப்பாடு பட்டாவது முடித்து விடுவீர்கள். விஐபிகளின் அறிமுகமும், உதவியும் கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். உங்களின் முயற்சிகளுக்கு தாயார் ஆதரவாக இருப்பார்.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT