Published : 10 Jun 2025 06:29 AM
Last Updated : 10 Jun 2025 06:29 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: வீண் அலைச்சல், காரியத் தடை வரக் கூடும். வெளிவட்டாரத்தில் நிதானம் தேவை. முன்கோபத்தை குறைத்துக் கொள்ளவும். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆலோசனையைக் கேட்கவும். உத்தியோகம் சிறக்கும்.

ரிஷபம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு கூடும். சேமிக்கும் எண்ணம் தோன்றும். பிள்ளைகளால் பெருமையடைவீர். வியாபாரத்தில் வேற்றுமொழி வாடிக்கையாளர்கள் வருவர். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

மிதுனம்: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர். ஆன்மிக நாட்டம் கூடும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவர். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.

கடகம்: அரசு காரியங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் நிம்மதியுண்டு.

சிம்மம்: ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் இனி ஓடி வந்து பேசுவர். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலக ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

கன்னி: எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லை நீங்கும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். உத்தியோகத்தில் இழுபறி வேலைகள் அனைத்தையும் முடிப்பீர்கள்.

துலாம்: அவசரத்துக்கு கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர். தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். வியாபாரம் விறுவிறுப்பாக அமையும். பாக்கி வசூலாகும். உத்தியோகம் சிறக்கும்.

விருச்சிகம்: பிள்ளையின் படிப்பு, வேலை தொடர்பாக வீண் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போகவும். வியாபாரத்தில் போட்டி இருக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

தனுசு: பிள்ளைகளின் பிடிவாதம் குறைந்து உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். மகளுக்கு உடனே திருமணம் கூடி வரும். வியாபாரத்தில் வராக்கடன் வந்து சேரும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும்.

மகரம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். மனைவி வழியில் ஒத்துழைப்பு கூடும். புது வேலை அமையும். அரசால் அனுகூலம் உண்டாகும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் வீண் விவாதம் வேண்டாம்.

கும்பம்: குழப்பம் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர். ஆன்மிகவாதி, மகான்களை தரிசிக்கும் வாய்ப்பு கிட்டும். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.

மீனம்: திட்டமிட்டவேலையை முடிக்க, வேகத்தை அதிகரிப்பீர். விஐபிகளின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x