Published : 09 Jun 2025 06:20 AM
Last Updated : 09 Jun 2025 06:20 AM
மேஷம்: திடீர் வெளியூர் பயணத்தால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். குடும்பத்தில் வீண் குழப்பங்கள் ஏற்படும். வியாபாரத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும்.
ரிஷபம்: திடமாக செயல்பட்டு முக்கிய முடிவு எடுப்பீர்கள். பிரபலங்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். பயணம் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பணியாளர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள்.
மிதுனம்: தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டார தொடர்பு அதிகரிக்கும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் அலைச்சல், டென்ஷன் விலகும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள்.
கடகம்: நினைத்த காரியங்கள் நிறைவேறும். பிள்ளை கள் குடும்ப சூழ்நிலையை அறிந்து செயல்படுவார்கள். உங்களை சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள்.
சிம்மம்: புது வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டு. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் விலகும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.
கன்னி: நீங்கள் ஏற்கெனவே செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டு கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். வியாபாரத்துக்காக புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள்.
துலாம்: இங்கிதமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். உற்சாகம், தோற்றப் பொலிவு கூடும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் தெரியும். பயணம் சிறப்பாக அமையும். தொழில் போட்டிகள் குறையும்.
விருச்சிகம்: வீண் அலைச்சல், அசதி, டென்ஷன் அதிகரிக்கும். பெரியவர்களின் பேச்சை கேட்டு செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் லாபம் உண்டாகும். ஆன்மிகம், தியானத்தில் ஈடுபாடு ஏற்படும்.
தனுசு: சுறுசுறுப்புடன் செயல்பட்டு வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சிந்தனை திறன் அதிகரிக்கும். உடல்நலம் சீராகும். வியாபாரம் சூடுபிடிக்கும். பாக்கிகள் வசூலாகும்.
மகரம்: குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்துகொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வழக்கில் இருந்த தேக்க நிலை மாறும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் ஆதாயம் உண்டு.
கும்பம்: வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள். மனைவிவழி உறவினர்களால் அனுகூலம் உண்டு. நண்பர்கள் உதவியுடன் புதிய வேலை கிடைக்கும். வியாபாரம் லாபம் தரும்.
மீனம்: தள்ளிப்போன சுபகாரியங்கள் கைகூடி வரும். பண வரவு உண்டு. பொருட்கள் சேரும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். கூட்டு தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT