Published : 06 Jun 2025 06:07 AM
Last Updated : 06 Jun 2025 06:07 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வேற்றுமதத்தவர் உதவுவார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்பு தேடி வரும். மேலதிகாரி பாராட்டுவார்.

ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். அரசாங்க அதிகாரிகளை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகம் சிறக்கும்.

மிதுனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். அலுவலகத்தில் முக்கிய கோப்புகளை கவனமாக கையாளவும். பங்குதாரர்களின் உதவியுடன் வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள்.

கடகம்: பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து காத்திருந்த தொகை கைக்கு வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

சிம்மம்: முகமலர்ச்சியுடன் காணப்படுவீர். நீண்டநாள் விருப்பங்களை பூர்த்தி செய்து கொள்வீர். தம்பதிக்குள் மகிழ்ச்சியுண்டு. தந்தையின் உடல்நிலை சீராக இருக்கும். வியாபாரம் சிறக்கும். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.

கன்னி: எதிர்பாராத செலவு வரக் கூடும். குடும்பத்தாரின் பேச்சைக் கேட்டு நடக்கவும். அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் ஏற்றம் உண்டு, பணியாட்களின் தொந்தரவு இருக்கும். கவனம் தேவை.

துலாம்: புது கருத்துகளால் சுற்றியிருப்பவர்களை வசீகரிப்பீர். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர். பணவரவு உண்டு. தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.

விருச்சிகம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். உங்கள் உழைப்புக்கு பாராட்டு கிடைக்கும். சொத்து பிரச்சினையில் நல்ல தீர்வு காண்பீர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில்அமைதி காப்பது நல்லது.

தனுசு: அரசாங்க அதிகாரிகளின் நட்புறவு கிட்டும். உறவினர், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் புது பொறுப்பும், பதவியும் தேடி வரும்.

மகரம்: சொந்த ஊரிலிருந்து நல்ல செய்திகள் தேடி வரும். புதிதாக வாகனம் வாங்கும் அமைப்பு ஏற்படும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் கிடைப்பார்கள். அலுவலகத்தில் தடைபட்ட வேலைகள் நிறைவடையும்.

கும்பம்: பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். பொறுப்பு கூடும்.

மீனம்: வீண் அலைச்சல் அதிகரிக்கும். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் தலைமையிடத்தில் குறை கூற வேண்டாம். வியாபாரத்தில் பணியாட்களின் தொந்தரவு வரக் கூடும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x