Published : 05 Jun 2025 06:30 AM
Last Updated : 05 Jun 2025 06:30 AM
மேஷம்: குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். நண்பர்களை அனுசரித்து நடக்கவும். உத்தியோகரீதியாக பயணம் மேற்கொள்வீர். மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும்.
ரிஷபம்: நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். குடும்பத்தில் மனநிம்மதி கிட்டும். வியாபாரத்தில் லாபமுண்டு. அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
மிதுனம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முடிவுகளை எடுப்பீர். பிள்ளைகள் ஒத்துழைப்பார்கள். நண்பர்கள் உங்களை புரிந்து கொள்வர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
கடகம்: அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சொந்த-பந்தங்களால் அன்புத் தொல்லை உண்டு. வாகனத்தில் இருந்த பழுது நீங்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
சிம்மம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். தங்கம், வெள்ளி ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரம் லாபம் தரும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களிடம் சில பொறுப்புகளை ஒப்படைப்பார்.
கன்னி: அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். வீண் செலவுகளை கட்டுப்படுத்தவும். வியாபாரத்தில் போட்டி இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களை பற்றி தலைமையிடத்தில் குறை கூறாதீர்.
துலாம்: எதிர்பாராத பணவரவால் பழைய கடனை பைசல் செய்வீர். சேமிக்கத் தொடங்குவீர். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படத் தொடங்குவர். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை ஓரளவு குறையும்.
விருச்சிகம்: சகோதர வகையில் இருந்த அலைச்சல் விலகும். கலைப் பொருட்கள் சேரும். அலுவலகத்தில் அனைத்துவிதத்திலும் உங்கள் கை ஓங்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். பங்குதாரர்கள் ஆதரவு தருவர்.
தனுசு: குடும்பத்தில் உங்கள் ஆலோசனை ஏற்கப்படும். வாகனத்தை சீர் செய்வீர்கள். பிள்ளைகளிடம் இருந்த பிடிவாதம் குறையும். வியாபாரத்தில் போட்டி குறையும். அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும்.
மகரம்: குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர். புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். அரசு வேலைகள் முடிவுக்கு வரும். உத்தியோகம் சிறக்கும்.
கும்பம்: தம்பதிக்குள் கருத்துமோதல் வரும். திடீர் பயணங்களால் அலைச்சல் இருக்கும். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் உண்டு. புதிய பதவி கிட்டும். பொறுப்புகள் கூடும்.
மீனம்: தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். வங்கியில் கேட்ட கடனுதவி கிடைக்கும். பயணங்கள் உற்சாகம் தரும். வியாபாரரீதியாக முக்கிய பிரபலங்களை சந்திப்பீர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT