Published : 04 Jun 2025 06:13 AM
Last Updated : 04 Jun 2025 06:13 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பால்ய நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.

ரிஷபம்: எதார்த்தமான பேச்சால் சுற்றியிருப்பவர்களை கவர்ந்து விடுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும்.

மிதுனம்: நீண்டநாள் கடனை அடைக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். வீட்டில் சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும். குடும்பத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். அக்கம்பக்கத்தினரின் அன்புத்தொல்லை அதிகரிக்கும்.

கடகம்: கனவுகள் நனவாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி யும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்: உதாசீனப்படுத்திய உற்றார், உறவினர்கள் உங்கள் வீடுதேடி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள்.

கன்னி: எடுத்த காரியங்கள் இழுபறிக்குப் பின்னர் முடியும். மனைவிவழியில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். திடீர் பயணம் ஏற்படக் கூடும்.

துலாம்: தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்த பனிப்போர் முடிவுக்கு வரும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.

விருச்சிகம்: வியாபார ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களுடன் உறவாடிக்கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள்.

தனுசு: நீண்டநாட்களாக தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கைகூடி வரும். பிள்ளைகள் மனம்விட்டுப் பேசு வார்கள். பண விஷயத்தில் கறாராக இருப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.

மகரம்: சாதுர்யமாகச் செயல்பட்டு சில பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். நண்பர்கள், உறவினர்களின் வீட்டு விசேஷங் களை முன்னின்று நடத்துவீர்கள். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

கும்பம்: வறட்டுக் கவுரவத்துக்காக சேமிப்புகளைக் கரைக்காதீர்கள். வேலைச்சுமை, பயணங்கள் வந்து போகும். திடீர் செலவுகளால் கடன் வாங்கும் சூழல் ஏற்படும். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள்.

மீனம்: கடந்தகால இனிய சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் ஏற்படும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் வரும். ஆன்மிகக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x