Published : 03 Jun 2025 06:27 AM
Last Updated : 03 Jun 2025 06:27 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவர். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். உத்தியோகத்தில் வியக்கத்தக்க மாற்றங்கள் நிகழும்.

ரிஷபம்: இங்கிதமாக பேசி அனைவரையும் கவருவீர். தாயாரின் உடல்நலம் சீராகும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். அலுவலகத்தில் விவாதம் தவிர்ப்பீர். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.

மிதுனம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்து காட்டுவீர். உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகம் சிறக்கும்.

கடகம்: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பர். அலுவலகத்தில் சிலருக்கு பெரிய பொறுப்பு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.

சிம்மம்: திட்டமிட்ட வேலைகளை போராடி முடிப்பீர். குடும்பத்தில் சிறு சிறு கருத்து மோதல்கள் வரக்கூடும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களை குறை கூற வேண்டாம்.

கன்னி: அடிமனதிலிருந்த தாழ்வு மனப்பான்மை நீங்கும். பணவரவு உண்டு. வெளிவட்டாரத்தில் மதிக்கப் படுவீர். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.

துலாம்: தொட்ட காரியங்கள் துலங்கும். தனிப்பட்ட முறையில் முடிவுகளை எடுப்பீர். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். வியாபாரம் லாபகரமாக அமையும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் கிட்டும்.

விருச்சிகம்: புது யோசனைகளை தந்து உங்களை சுற்றியிருப்பவர்களை அசத்துவீர். பாதியில் நின்ற வீடு கட்டும் பணி முடியும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

தனுசு: புதியவர்கள் நண்பர்களாவர். புண்ணிய தலங்கள் சென்று வருவீர். தாயாரின் உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர். வியாபாரத்தில் எதிர்பாராத லாபத்தால் மகிழ்வீர்கள்.

மகரம்: உறவினர், நண்பர்கள் வகையில் விரயச் செலவு வரக்கூடும். பிள்ளைகளிடம் முன்கோபத்தை காட்டாதீர். வியாபாரத்தில் வேலையாட்கள் தொந்தரவு தருவார்கள். அலுவலகத்தில் விரும்பிய இடத்துக்கு மாற்றல் உண்டு.

கும்பம்: பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர். புது ஆடை, ஆபரணங்களில் மனம் லயிக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகம் சிறக்கும்.

மீனம்: அடிமனதில் இருந்த போராட்டம் நீங்கும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர். வியாபா ரத்தில் போட்டிகள் குறையும். பங்குதாரர்களின் ஆதரவு உண்டு. அலுவலகத்தில் வீண் விவாதம் தவிர்ப்பீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x