Published : 02 Jun 2025 06:32 AM
Last Updated : 02 Jun 2025 06:32 AM
மேஷம்: குடும்பத்தில் நிலவி வந்த காரசாரமான விவாதங்கள் மறையும். பிள்ளைகளால் பெருமையடை வீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத் தில் உயர் அதிகாரி நேசக்கரம் நீட்டுவார்.
ரிஷபம்: நீண்டகாலமாக தடைபட்டு வந்த காரியங்கள் சுமுகமாக முடியும். கணவன் - மனைவிக்குள் அன்யோன் யம் அதிகரிக்கும். சொந்த பந்தங்கள் மத்தியில் மரியாதை, அந்தஸ்து உயரும்.
மிதுனம்: கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வெளி வட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தள்ளிப்போன காரியங்கள் உடனே முடியும். தொழிலில் போட்டிகள் குறையும்.
கடகம்: வெளி வட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். தள்ளிப்போன வழக்கில் சாதகமான திருப்பம் வரும். அரசு, வங்கி காரியங்கள் விரைந்து முடியும். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும்.
சிம்மம்: பழைய சம்பவங்களை நினைத்து வருந்துவீர்கள். குடும்பத்தில் வீண் விவாதத்துக்கு இடம்தர வேண்டாம். வெளியூர் பயணத்தால் அலைச்சல், அசதி ஏற்படும். வியாபாரத்தில் லாபம் உண்டு.
கன்னி: பழைய பிரச்சினைக்கு சுமுக தீர்வு கிடைக்கும். அதிகார பதவியில் இருப்பவர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும்.
துலாம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.
விருச்சிகம்: புதியவர்களுடன் நட்புறவு ஏற்படும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். தொழில், வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும்.
தனுசு: மனப் போராட்டங்கள் ஓயும். சமயோசிதமான பேச்சால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பொருட்கள் சேரும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் நீங்கும்.
மகரம்: வீண் குழப்பம், அலைச்சல், அசதி அதிகரிக்கும். வியாபாரத்தில் நிதானம் தேவை. ஆன்மிகம், யோகா, தியானத்தில் நாட்டம் உண்டாகும். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.
கும்பம்: தொட்ட காரியங்கள் துலங்கும். தடைகள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனுக்குடன் முடியும். அரசு, வங்கி தரப்பில் இருந்து எதிர்பார்த்த தகவல் கிடைக்கும். பேச்சில் பொறுமை தேவை.
மீனம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். உடல்நலத்தில் கவனம் தேவை. தடைகள், இடையூறுகள் வந்தாலும், பொருட்படுத்தாமல் முன்னேறுவீர்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT