Published : 31 May 2025 06:15 AM
Last Updated : 31 May 2025 06:15 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர். தம்பதிக்குள் பரஸ்பரம் புரிந்து கொள்வீர். அலுவலகத்தில் நிம்மதி பிறக்கும். மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும்.

ரிஷபம்: உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிட்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்துகொள்வீர். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆலோசனையை கேட்டு நடக்கவும்.

மிதுனம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் வீடு தேடி வருவர். கையில் பணம் புரளும். அலுவலகரீதியாக இருந்த குழப்பங்கள் தீரும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்.

கடகம்: திட்டமிட்ட வேலையை முடிக்க போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் குழப்பங்கள் வரும். பயணங்கள் அலைச்சல் தரும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் தலைமையிடத்தில் குறை கூற வேண்டாம்.

சிம்மம்: கையில் பணம் புரளும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவர். நீங்கள் பார்க்க நினைத்தவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

கன்னி: முன்கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவர். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டு. உத்தியோகம் சிறக்கும்.

துலாம்: அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர் அறிமுகமாவார். முன்கோபத்தை குறைப்பீர். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.

விருச்சிகம்: தம்பதிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகள் நேசக்கரம் நீட்டுவார்.

தனுசு: குடும்பத்தில் விட்டு கொடுத்து போகவும். அலுவலகத்தில் கோப்புகளை கவனமாக கையாளவும். பணிகளை முடிக்க போராடுவீர். வியாபாரரீதியான பயணம் அலைச்சல்தரும். நிதானமாக முடிவெடுக்கவும்.

மகரம்: பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். மனவலிமையுடன் எதையும் முடிப்பீர். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். விரும்பிய இடத்துக்கு மாற்றல் கிடைக்கும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்ப்பீர்.

கும்பம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் இருந்த குழப்பங்கள் நீங்கும். அலுவலகத்தில் பணிச்சுமை ஓரளவு குறையும்.

மீனம்: நம்பிக்கைக்கு உரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதியுண்டு. வியாபாரத்தில் பழைய பணியாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகரீதியாக திடீர் பயணங்கள் மேற்கொள்வீர்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x