Published : 30 May 2025 06:05 AM
Last Updated : 30 May 2025 06:05 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: தெளிவான முடிவு எடுப்பீர். அடுக்கடுக்காக இருந்த செலவுகள் குறையும். சவாலான காரியங்களை எடுத்து முடிப்பீர்கள். வியாபாரரீதியாக பிரபலங்களின் உதவியை நாடுவீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

ரிஷபம்: புதியவர்கள் அறிமுகமாவர். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர். பழைய வழக்குகள் சாதகமாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகம் சிறக்கும்.

மிதுனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்துகளை விற்பீர். பெரிய மனிதர்கள், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

கடகம்: மனைவியின் உடல்நலம் தொடர்பாக அலைச்சல் இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்ளவும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் கோப்புகளை கவனமாக கையாளவும்.

சிம்மம்: மன நிம்மதியுடன் இருப்பீர். எடுத்த பணிகளில் வெற்றி காண்பீர். தாய்வழி உறவினரால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் குறை கூறுவதை தவிர்த்துவிடவும்.

கன்னி: பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். பணவரவு உண்டு. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் நேசக்கரம் நீட்டுவர்.

துலாம்: உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரக்கூடும். மூத்த சகோதர, சகோதரிகள் பண உதவி செய்வர். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் விவாதங்கள் வேண்டாம்.

விருச்சிகம்: மகிழ்ச்சியுடன் காணப்படுவீர். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசுக் காரியங்களில் வெற்றி உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.

தனுசு: குடும்பத்தாருடன் வீண் விவாதங்கள் வரக்கூடும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. அக்கம் பக்கத்தினருடன் அளவாக பேசி பழகவும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு.

மகரம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராக பேசி காரியம் சாதிப்பீர். சேமிக்கும் அளவுக்கு வருவாய் கூடும். பழுதான சாதனங்களை மாற்றுவீர்கள். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

கும்பம்: எதிர்பார்த்து காத்திருந்த பணம் வரும். வீட்டில் பழுதான பொருட்களை மாற்றுவீர். அலுவலகத்தில் உங்களின் தரம் ஒருபடி உயரும். புதிய பதவி கிட்டும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர்.

மீனம்: தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பணியாட்களின் ஆதரவுண்டு. அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x