Published : 29 May 2025 06:21 AM
Last Updated : 29 May 2025 06:21 AM
மேஷம்: அடுக்கடுக்காக வந்த செலவுகள் குறையும். சவாலான காரியங்களையும் முடிப்பீர். வியாபாரரீதியாக பிரபலங்களின் உதவியை நாடுவீர். உத்தியோகத்தில் நிம்மதியுண்டு. மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்.
ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த விலைக்கே பூர்வீக சொத்தை விற்பீர். பெரிய மனிதர்கள், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிட்டும். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.
மிதுனம்: குடும்பத்தாருடன் வீண் விவாதங்களை தவிர்க்கவும். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். அலுவலகத்தில் கோப்புகளை கவனமாக கையாளவும்.
கடகம்: பணவரவு திருப்தி தரும். மனக்குழப்பம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர். அரசு காரியங்களில் வெற்றி உண்டு. வியாபாரத்தில் லாபம் பார்க்கலாம். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்.
சிம்மம்: புதியவர்கள் அறிமுகமாவர். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர். பழைய வழக்குகள் சாதகமாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகம் சிறக்கும்.
கன்னி: பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
துலாம்: சொந்த பந்தங்களிடையே மதிப்பு, மரியாதை கூடும். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரக்கூடும். மூத்த சகோதர சகோதரிகள் பண உதவி செய்வர். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும்.
விருச்சிகம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். தாயார், மனைவியின் உடல்நிலை லேசாக பாதிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்த்துவிடவும்.
தனுசு: தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். சகோதர வகையில் உதவியுண்டு. வீடு, வாகன யோகம் உண்டு. வியாபாரத்தில் ஓரளவு லாபம் பார்க்கலாம். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்கள்.
மகரம்: நண்பர்கள், உறவினர்களால் ஆதாயம் உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போவீர். வியாபாரத்தை விரிவுபடுத்த முயல்வீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பர்.
கும்பம்: எதிர்பார்த்து காத்திருந்த பணம் வரும். வீட்டில் பழுதான பொருட்களை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். பொறுப்பு கூடும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர் கிடைப்பார்.
மீனம்: சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர். தாய்வழி உறவினரால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் தலைமையிடத்தில் குறை கூற வேண்டாம்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT