Published : 27 May 2025 06:20 AM
Last Updated : 27 May 2025 06:20 AM
மேஷம்: உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பர். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர். வியாபாரம் சிறக்கும்.
ரிஷபம்: முன்கோபம், வீண் அலைச்சல் வரக்கூடும். குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்துப் போகவும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
மிதுனம்: சாணக்கியத்தனமாகப் பேசி காரியம் சாதிப்பீர். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தை திருப்பித் தருவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்று தீரும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பர்.
கடகம்: மனதில் இருந்த பயம் விலகும். திடீர் பண வரவு, செல்வாக்கு உண்டு. பழுதான வாகனம் சீராகும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். பங்குதாரரின் ஆலோசனைப்படி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
சிம்மம்: சகோதர வகையில் உதவி கிடைக்கும். மனைவி வழியில் ஒத்துழைப்பு கூடும். விரும்பிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
கன்னி: எதிர்பாராத பணவரவால் மன மகிழ்ச்சியுண்டு. உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவர். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர். அலுவலகத்தில் மதிப்புயரும்.
துலாம்: பேச்சில் கவனம் தேவை. பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபமுண்டு. அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்வது நல்லதல்ல.
விருச்சிகம்: பழைய நல்ல நினைவுகளில் மூழ்குவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர். ஆன்மிக நாட்டம் கூடும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். அலுவலகத்தில் எதிலும் உங்கள் கை ஓங்கும்.
தனுசு: பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர். பிரியமானவர்களுடன் சந்திப்பு நிகழும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்.
மகரம்: மறதியால் பிரச்சினை வந்து நீங்கும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். சாலைகளை கவனமாக கடக்கவும். வியாபாரத்தை சிறிய அளவில் விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
கும்பம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர்கள். மனதுக்கு பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.
மீனம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். மனதில் பட்டதை பேச வேண்டாம். உறவினர்களால் மனநிம்மதி கிட்டும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT