Published : 26 May 2025 06:20 AM
Last Updated : 26 May 2025 06:20 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: இங்கிதமாக பேசி, வேலையை முடியுங் கள். யாரையும் எடுத்தெறிந்து பேச கூடாது. நாடி வந்தவர் களுக்கு இயன்ற உதவியை செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் பழைய சரக்குகள் தேங்கும்.

ரிஷபம்: பண வரவால் பழைய கடனை அடைப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். பிள்ளை கள் உடல்நலம் சீராகும். முன்கோபத்தை குறையுங்கள். வியாபாரத்தில் போட்டி குறையும்.

மிதுனம்: நம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களை முடிப்பீர்கள். தந்தை வழியில் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்கு விற்று தீரும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டு.

கடகம்: தள்ளிப்போன சுபநிகழ்ச்சிகள் கைகூடி வரும். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிப்பீர்கள். சுற்றுலா பயணங்கள் உற்சாகம் தரும்.

சிம்மம்: உங்கள் பேச்சாற்றல், ஆளுமை திறன் அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள்.

கன்னி: பழைய கசப்பான சம்பவங்களை மறந்து, உறவினர்கள் ஒன்றுகூடுவார்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். பிள்ளைகளின் ஆர்வம் படிப்பில் திரும்பும்.

துலாம்: முன்கோபம், திடீர் பயணம், அலைச்சல், அசதி அதிகரிக்கும். எக்காரியத்திலும் நிதானம் தேவை. தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டு. ஆன்மிகம், தியானத்தில் ஈடுபாடு காட்டுவீர்கள்.

விருச்சிகம்: இழுபறியாக இருந்த சொத்து பிரச் சினைகள் முடிவுக்கு வரும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து நடப்பார்கள். வீடு, கடையை விரிவுபடுத்துவீர்கள்.

தனுசு: வருங்கால வளர்ச்சிக்காக முக்கிய முடிவு எடுப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய சரக்கு விற்று தீரும். அலுவலகத்தில் அந்தஸ்து உயரும்.

மகரம்: குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்து கொண்டு, அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். முக்கிய நபர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். பேச்சில் பொறுமை தேவை.

கும்பம்: விலகி சென்ற சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். தடைபட்ட அரசு, வங்கி வேலைகள் முடியும். சுபநிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

மீனம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி நெருக்கம் கூடும். பண பற்றாக்குறை விலகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x