Published : 23 May 2025 06:12 AM
Last Updated : 23 May 2025 06:12 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி திரும்பும். வெளிநாட்டு பயணத்துக்கான விசா கிடைக்கும். புதிய நபர்களால் ஆதாயம், அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புதிய உத்திகளை கையாள்வீர்கள்.

ரிஷபம்: வீட்டில் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரம் திருப்திகரமாக அமையும்.

மிதுனம்: சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோர் உடல்நலம் சீராகும். உறவினர்கள், நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிள்ளைகளால் பெருமை உண்டு.

கடகம்: பிரபலங்களின் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்ளும் அளவுக்கு நெருக்கமாவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழிலில் எதிராக செயல்பட்ட பணியாளர்களை மாற்றுவீர்கள்.

சிம்மம்: பணம், நகை, கோப்புகளை கவனமாக கையாளுங்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். பயணங்கள் அலைச்சல் தரும்.

கன்னி: பிரச்சினையில் இருந்து விடுபடுவதற்கான வழியை கண்டறிவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உற்சாகம், தோற்ற பொலிவு கூடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரியின் ஆதரவு உண்டு.

துலாம்: உங்கள் வெளிப்படையான பேச்சால் காரியங்களை முடித்து காட்டுவீர்கள். எதிலும் மகிழ்ச்சி கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உத்தியோகத்தில் பாராட்டு பெறுவீர்கள்.

விருச்சிகம்: மனதுக்கு இதமான செய்தி வரும். உடல்சோர்வு, வயிற்றுவலி நீங்கி, சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

தனுசு: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். வீண் செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த, முக்கிய நபர்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் பிரச்சினைகள் ஓயும்.

மகரம்: மின்னணு, மின்சார சாதனங்கள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் பண உதவி கிடைக்கும். வாகன பழுது நீங்கும். வியாபார ரீதியாக முக்கிய நபர்களை சந்திப்பீர்கள்.

கும்பம்: வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் சூடுபிடிக்கும்.

மீனம்: குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். காரிய தடைகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் ஊழியர்கள் தொல்லை தருவார்கள். அலைச்சல் இருக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x