Published : 22 May 2025 06:18 AM
Last Updated : 22 May 2025 06:18 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: புது திட்டங்களை தீட்டுவீர். பள்ளி, கல்லூரி நண்பர்கள் தேடி வருவார்கள். தாயாரின் மருத்துவச் செலவுகள் குறையும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்த்துவிடவும்.

ரிஷபம்: வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

மிதுனம்: பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். பூர்வீக சொத்துப் பிரச்சினையை பேசித் தீர்ப்பீர். மூத்த சகோதரர் உதவுவார். விமர்சனங்களையும் தாண்டி உத்தியோகத்தில் முன்னேறுவீர். வியாபாரம் சிறக்கும்.

கடகம்: இங்கிதமாகப் பேசி சுற்றியிருப்பவர்களை கவருவீர். பிரபலங்களால் ஆதாயமுண்டு. பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.

சிம்மம்: எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் கூட இழுபறியாகும். உடல்நலத்தில் கவனம் தேவை. வீட்டில் குழப்பம் ஏற்படும். வியாபாரத்தில் சிக்கல்கள் வரக் கூடும். அலுவலகத்தில் வீண் விவாதம் தவிர்ப்பீர்.

கன்னி: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

துலாம்: குடும்பத்தாரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர். தந்தை வழியில் இருந்து வந்த மனஸ்தாபங்கள் விலகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பர்.

விருச்சிகம்: எதிர்பார்த்தபடி சில வேலைகளை முடிப்பீர். தம்பதிக்குள் விட்டு கொடுத்து போவீர். வாகனத்தை மாற்றுவீர். வியாபார தந்திரங்களை கற்றுக் கொள்வீர். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனைகள் ஏற்கப்படும்.

தனுசு: உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்களை கண்டறிவீர். திட்டமிட்ட பணிகளை விரைந்து முடிப்பீர். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் இருந்து வந்த பனிப்போர் விலகும்.

மகரம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு முக்கிய வேலைகளை முடிப்பீர்கள். சொந்த ஊரிலிருந்து நற்செய்திகள் வரும். வியாபாரத்தில் வராது என்றிருந்த பாக்கிகள் வந்துசேரும். குழப்பங்கள் நீங்கி உத்தியோகத்தில் நிம்மதி கிட்டும்.

கும்பம்: நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டி விலகும். பங்குதாரர்களின் ஆதரவுடன் புதிய கிளை திறப்பீர். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர்.

மீனம்: அநாவசியமாக யாருக்காகவும் எதற்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும். சக ஊழியர்களுடன் இணக்கமாக செயல்படவும். வியாபாரத்தில் எச்சரிக்கை அவசியம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x