Published : 20 May 2025 06:16 AM
Last Updated : 20 May 2025 06:16 AM
மேஷம்: மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் நிம்மதியுண்டு.
ரிஷபம்: சவாலான காரியங்களையும் சாதுர்யமாக முடித்து வெற்றி பெறுவீர். தடை நீங்கும். அலுவலகப் பிரச்சினை தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பீர். வியாபாரத்தில் போட்டி குறையும். லாபம் கூடும்.
மிதுனம்: கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை ஒருவழியாக தந்து முடிப்பீர். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
கடகம்: தவிர்க்க முடியாத செலவு வரும். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். வியாபாரத்தில் ஓரளவு லாபமுண்டு. அலுவலகத்தில் யாரைப் பற்றியும் குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். விவாதம் தவிர்க்கவும்.
சிம்மம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் கிட்டும்.
கன்னி: தாய்வழி உறவினர்களிடம் இருந்த மனக்கசப்பு நீங்கும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
துலாம்: பேசாமல் இருந்த உறவினர் வந்து பேசுவார். நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவர். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
விருச்சிகம்: நெடுநாட்களாக இழுபறியாக இருந்த காரியம் முடிவுக்கு வரும். தாயாரின் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும்.
தனுசு: மற்றவர்களால் செய்ய முடியாத காரியங்களை முடித்து காட்டுவீர். பிள்ளைகள் பொறுப்புடன் நடப்பர். வியாபாரத்தை விரிவுபடுத்தும் விதமாக வங்கிக்கடன் பெறுவீர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
மகரம்: பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டு கொடுத்து போகவும். ஆரோக்கியத்தில் அக்கறையும், வியாபாரத்தில் நிதான மும் தேவை. அலுவலகரீதியான பயணம் உண்டு.
கும்பம்: முகத்தில் தெளிவு பிறக்கும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர். உயர்ந்த பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்கள்.
மீனம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். நண்பர்கள் உதவுவார்கள். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் நிம்மதியுண்டு.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT