Published : 15 May 2025 06:13 AM
Last Updated : 15 May 2025 06:13 AM
மேஷம்: உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். சகோதர வகையில் நன்மை பிறக்கும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். வீடு, வாகனத்தில் பழுதை மாற்றுவீர். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.
ரிஷபம்: எக்காரணத்துக்காகவும், யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திடாதீர். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். வியாபாரத்தில் புதிய பங்குதாரரையும் அலுவலகத்தில் மேலதிகாரியையும் அனுசரித்து செல்வது நல்லது.
மிதுனம்: புத்திசாலித்தனம் வெளிப்படும். பணவரவு உண்டு. பிரபலங்கள் நண்பர்களாவர். வீட்டில் அமைதி நிலவும். ஆன்மிகத்தில் மனம் செல்லும். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
கடகம்: சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். நீண்டநாள் கனவு நிறைவேறும். பிள்ளைகளின் உடல் நலம் சீராகும். வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவு எடுப்பீர். வியாபாரம், உத்தியோகத்தில் கவனம் தேவை.
சிம்மம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். வியாபாரரீதியாக பயணம் மேற்கொள்வீர். அலுவலகத்தில் இடமாற்றம் உண்டு.
கன்னி: முன்பு செய்த உதவிக்கு பாராட்டப்படுவீர். புதியவர் அறிமுகமாவார். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். அலுவலகத்தில் மதிப்பு ஒருபடி உயரும். உற்சாகமான பேச்சால் வாடிக்கையாளர்களை கவருவீர்.
துலாம்: சோர்வாக இருந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர். சிந்தனைத்திறன் அதிகரிக்கும். குழப்பம் நீங்கி குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
விருச்சிகம்: பழைய கசப்பான சம்பவங்களை பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் நிதானமாக செயல்படவும்.
தனுசு: பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் அவசர முடிவு எடுக்காதீர். சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு அனைவரையும் கவருவீர்.
மகரம்: பணப்பற்றாகுறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர். மனநிறைவுடன் சில வேலைகளை செய்து முடிப்பீர். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
கும்பம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு உண்டு. ஆன்மிகவாதிகளை சந்திப்பீர். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவு உண்டு. அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் சேரும். மேலதிகாரிகள் பாராட்டுவர்.
மீனம்: தம்பதிக்குள் நெருக்கம் கூடும். பளிச்சென்று பேசி அனைவரையும் கவருவீர். வீட்டில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும். வராதிருந்த உறவினர் தேடி வருவர். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT