Published : 14 May 2025 06:16 AM
Last Updated : 14 May 2025 06:16 AM
மேஷம்: பழைய பிரச்சினைகள் மனதை வாட்டும். தாயாருடன் வீண் விவாதம் வரும். வியாபாரத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. யாரைப் பற்றியும் குறை கூற வேண்டாம்.
ரிஷபம்: தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
மிதுனம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை சாதிப்பீர். சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். உடன் பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.
கடகம்: எதிரிகள் அடங்கிப் போவார்கள். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரரீதியான பயணத்தால் ஆதாயம் உண்டு. அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
சிம்மம்: உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர் யார் என்பதை உணர்வீர்கள். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. அலுவலகத்தில் தேடிய ஆவணம் கிடைக்கும்.
கன்னி: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். பிள்ளைகள் படிப்பு விஷயமாக அலைச்சல் உண்டு. வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
துலாம்: ஒருவித படபடப்பு, பயம் வந்து செல்லும். தம்பதிக்குள் ஈகோ பிரச்சினை வரும். வியாபாரத்தில் பாக்கியை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் பணிச் சுமை கூடும். இருப்பினும் உரிய அங்கீகாரம் கிட்டும்.
விருச்சிகம்: எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை அலைந்து முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்து கொள்வர். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.
தனுசு: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.
மகரம்: புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் இடமாற்றம் உண்டு.
கும்பம்: சோர்வாக இருந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர். சிந்தனைத் திறன் கூடும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.
மீனம்: மறைந்து கிடந்த திறமை வெளிப்படும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT