Published : 06 May 2025 06:15 AM
Last Updated : 06 May 2025 06:15 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: நேர்கொண்ட பார்வையுடன் சில முடிவுகள் எடுப்பீர். பிரபலங்கள் உதவுவர். அலுவலகரீதியான பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பணியாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவர்.

ரிஷபம்: உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர் யார் என்பதை கண்டறிவீர். பிள்ளைகள் குடும்ப சூழல் அறிந்து செயல்படுவர். வியாபாரத்தில் நினைத்தது நிறைவேறும். உத்தியோகத்தில் மேன்மையுண்டு.

மிதுனம்: தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் வீண் அலைச்சல், டென்ஷன் விலகும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

கடகம்: புது வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயமுண்டு. கூட்டுத் தொழிலில் போட்டி விலகும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். மேலதிகாரிகள் பாராட்டுவர்.

சிம்மம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்கள் பேச்சை கேட்க வில்லையே என ஆதங்கப்படுவீர். வியாபாரத்தில் அவசர முடிவு வேண்டாம். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

கன்னி: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரத்துக்காக புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். லாபம் உண்டு.

துலாம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு பணிகளை விரைந்து முடிப்பீர். ஆரோக்கியம் சீராகும். சிந்தனை திறன் கூடும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகம் சிறக்கும்.

விருச்சிகம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். தோற்றப் பொலிவு கூடும். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். அலுவலகரீதியான பயணங்கள் சிறப்பாக அமையும். தொழிலில் போட்டிகள் குறையும்.

தனுசு: குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்து கொள்வீர். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வழக்கில் இருந்த தேக்க நிலை மாறும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.

மகரம்: முக்கிய முடிவுகளை கவனமாக எடுக்கவும். மூத்தோர் பேச்சை கேட்டு செயல்படுங்கள். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் கூடும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் கிடைக்கும்.

கும்பம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர். மனைவிவழி உறவினர்கள் பணிவார்கள். நண்பர் உதவியுடன் புது வேலை கிடைக்கும். அலுவலகத்தில் புதிய பதவி கிடைக்கும். வியாபாரம் சிறக்கும்.

மீனம்: தள்ளிப் போய்கொண்டிருந்த சுபகாரியங்கள் கை கூடி வரும். பணவரவால் வீடு, வாகனத்தை மாற்றுவீர். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் அனுசரணையாக நடந்து கொள்வர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x