Published : 03 May 2025 06:46 AM
Last Updated : 03 May 2025 06:46 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: சாணக்கியத்தனமாகப் பேசி காரியம் சாதிப்பீர். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தை திருப்பித் தருவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகரீதியாக பயணம் செல்வீர்கள்.

ரிஷபம்: உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பர். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்.

மிதுனம்: திடீர் பணவரவு, செல்வாக்கு உண்டு. மனதில் இருந்த பயம் விலகும். பழுதான வாகனம் சீராகும். சிலர் புது வாகனம் வாங்குவீர். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள்.

கடகம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் கிடைக்கும். தடைகளை தகர்த்தெறிந்து தொழிலில் முன்னேறுவீர்.

சிம்மம்: சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர். மனைவி வழியில் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.

கன்னி: எதிர்பாராத பணவரவால் மகிழ்ச்சியுண்டு. உறவினர், நண்பர்கள் ஆதரவாக பேசத் தொடங்குவர். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

துலாம்: பிள்ளைகளால் பெருமையடைவீர். பழைய நல்ல நினைவுகளில் மூழ்குவீர். நட்பு வழியில் நற்செய்தி கேட்பீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர்.

விருச்சிகம்: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். பிரியமானவர்களை சந்தித்து மகிழ்வீர். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர். வியாபாரம் சிறக்கும்.

தனுசு: பேச்சில் கவனம் தேவை. முடிவெடுப்பதில் தடுமாற்றம் வரும். குடும்பத்தில் விவாதம் வேண்டாம். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆலோசனையைக் கேட்டு செயல்படவும்.

மகரம்: மறதியால் பிரச்சினை வந்து நீங்கும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். சாலைகளை கவனமாக கடந்து செல்லவும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கம் இருக்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

கும்பம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர். உடல் ஆரோக்கியம் திருப்தி தரும். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்கள்.

மீனம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். உறவினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x