Published : 30 Apr 2025 06:10 AM
Last Updated : 30 Apr 2025 06:10 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.

ரிஷபம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். கையிருப்பு கரையக் கூடும். வாகனத்தில் நிதானம் தேவை. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர். அலுவலகத்தில் அமைதி காப்பது நன்மை தரும்.

மிதுனம்: நம்பிக்கைக்கு உரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவு எடுப்பீர். தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பழைய நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகம் சிறக்கும்.

கடகம்: குடும்பத்தில் நிம்மதி தங்கும். உங்கள் செயலை பார்த்து மற்றவர்கள் வியப்பர். மறைமுக எதிர்ப்பு விலகும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். புது இடத்துக்கு கடையை மாற்றி தொழிலில் முன்னேறுவீர்.

சிம்மம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். வியாபாரத்தில் பணி யாட்களின் ஆதரவு உண்டு. உத்தியோத்தில் ஏற்றமுண்டு.

கன்னி: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தூக்கமின்மை, மன உளைச்சல் நீங்கும். தாய்வழி உறவினர்கள் உதவி நாடி வருவர். வியாபாரம், அலுவலகத்தில் நிம்மதியுண்டு.

துலாம்: புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். குலதெய்வ பிரார்த்தனைகள் நிம்மதி தரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுண்டு. வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்.

விருச்சிகம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக டென்ஷன் இருக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். வயிற்று வலி வரும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

தனுசு: உடன்பிறந்தவர்களால் ஆதாயமுண்டு. முரண்டு பிடித்த பிள்ளைகள் இனி சொல்பேச்சு கேட்பர். பேச்சில் தெளிவு பிறக்கும். தாயாரின் உடல்நலம் நிம்மதி தரும். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் மதிப்புயரும்.

மகரம்: உங்களின் அணுகுமுறையை மாற்றி தடைபட்ட வேலையை முடிப்பீர்கள். சகோதரியின் விசேஷத்துக்கு அதிகம் உழைப்பீர். உத்தியோகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். வியாபாரத்தில் வெற்றி காண்பீர்.

கும்பம்: மற்றவர்களின் ரசனைக்கேற்ப செயல்படுவீர். உறவினர்கள் உங்களை பெருமையாக பார்ப்பர். ஊர் நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்குவீர். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் நற்பெயர் கிட்டும்.

மீனம்: தெளிவாக பேசி சில வேலைகளை முடித்துக் காட்டுவீர். தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வங்கிக்கடனை பைசல் செய்வீர். வியாபாரம் சூடு பிடித்து லாபமுண்டு. உத்தியோகத்தில் நிம்மதி கிட்டும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x