Published : 10 Apr 2025 05:57 AM
Last Updated : 10 Apr 2025 05:57 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பழைய பிரச்சினைகளை சுமுகமாக பேசித் தீர்ப்பீர்கள். வீட்டில் நிம்மதி பிறக்கும். பிள்ளைகளின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் அனுபவமிக்க பணியாட்கள் வருவர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

ரிஷபம்: இழுபறியாக இருந்து வந்த பணிகள் முடியும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் சாதகமாகும். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவர்.

மிதுனம்: வெகுநாட்களாக மனதளவில் இருந்துவந்த பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். புது ஆபரணம், ஆடைகள் சேரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.

கடகம்: குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். எதார்த்தமான பேச்சால் தடைபட்ட காரியங்களை முடிப்பீர். வியாபாரத்தில் பணியாட்கள் ஆதரவாக நடந்து கொள்வார்கள். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.

சிம்மம்: திட்டமிட்ட பணிகளை முடிப்பதில் தடை ஏற்படும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். வியாபாரத்தில் வேலையாட்கள் தொந்தரவு தருவார்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் கிடைக்கும்.

கன்னி: பால்ய நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். தாய்வழி உறவினர்களால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் அன்பு காட்டுவர். வியாபார விஷயமாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.

துலாம்: தடைபட்டுக் கொண்டிருந்த சுபகாரியங்கள் நடந்தேறும். நீண்டகால நண்பர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். வியாபாரரீதியாக சில முக்கிய பிரபலங்களை சந்திப்பீர். அலுவலகத்தில் மதிப்புயரும்.

விருச்சிகம்: புதுப் புது எண்ணங்கள் மனதில் தோன்றும். குடும்பத்தினரின் ஆதரவு உண்டு. உடல் நலம் சீராகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரம் ஓரளவு திருப்தி தரும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.

தனுசு: குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பணவரவு உண்டு. நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரரீதியாக சிலரை சந்திப்பீர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.

மகரம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பணவரவு உண்டு. உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். தம்பதிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

கும்பம்: தாய்வழி உறவினர்களிடம் மனக்கசப்புகள் வரலாம். முன்கோபத்தை தவிர்க்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருப்பினும் உரிய அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரத்தில் அவசர முடிவு வேண்டாம்.

மீனம்: சோர்வு நீங்கி முக மலர்ச்சியுடன் காணப்படுவீர். பொது காரியங்களில் ஈடுபடுவீர். பிள்ளைகளால் ஏற்பட்ட சிக்கல் நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்புதருவர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x