Published : 05 Apr 2025 06:05 AM
Last Updated : 05 Apr 2025 06:05 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: வருங்காலத்துக்காக முக்கிய முடிவு எடுப்பீர். தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்பனை செய்வீர். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும்.

ரிஷபம்: பணவரவால் பழைய கடனை அடைப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். பிள்ளை களின் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். அலுவலகத்தில் விரும்பிய இடமாற்றமுண்டு.

மிதுனம்: அவசர முடிவுகள் வேண்டாம். குடும்பத்தில் குழப்பங்கள் வரும். வியாபாரத்தில் பங்குதாரர்களை அனுசரித்து செயல்படுவது நல்லது. அலுவலகத்தில் பணிகளை போராடி முடிப்பீர். அமைதி காக்கவும்.

கடகம்: தள்ளிப் போய் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிகள் கைகூடி வரும். தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும். பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிப்பீர். அலுவலக ரீதியான பயணம் திருப்தி தரும். வியாபாரம் சிறக்கும்.

சிம்மம்: உங்களின் ஆளுமை திறன் அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். குழப்பம் நீங்கி உத்தியோகத்தில் நிம்மதி உண்டு.

கன்னி: பழைய கசப்பான சம்பவங்கள் மறையும். குடும்பத்தில் நல்லது நடக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

துலாம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர். தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினைகள் தீரும். பணப் பற்றாக்குறை நீங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

விருச்சிகம்: புது எண்ணங்கள் மனதில் தோன்றும். முகப் பொலிவு கூடும். நீண்டநாளாக இழுபறியாக இருந்த காரியங்கள் கைகூடும். வியாபாரத்தில் போட்ட முதல் இரட்டிப்பாகும். அலுவலகத்தில் போட்டிகள் குறையும்.

தனுசு: இங்கிதமாக பேசி பணிகளை முடிக்கவும். பிள்ளைகளால் கையிருப்பு கரையும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் தேங்கும். அலுவலகத்தில் யாரையும் குறை கூறாதீர். மேலதிகாரிகளை பகைத்து கொள்ளாதீர்.

மகரம்: குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றி கொள்வீர்கள். அலுவலகத்தில் வீண் விவாதம் வேண்டாம். வியாபார ரீதியாக சில மாற்றங்களை செய்து வெற்றி காண்பீர்கள்.

கும்பம்: பழைய நண்பர்கள் தேடி வருவர். தடைபட்ட அரசாங்க வேலைகள் முடியும். குடும்பத்துடன் சென்று சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர். பணவரவு திருப்தி தரும். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.

மீனம்: பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். கூட்டுத்தொழிலில் கடையை விரிவுபடுத்துவீர். உத்தியோகம் சிறக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x