Published : 19 Mar 2025 05:40 AM
Last Updated : 19 Mar 2025 05:40 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பிள்ளைகள் படிப்பு விஷயமாக அலைச்சல் இருக்கும். குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர். வியாபாரத்தில் கவனம் அவசியம். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

ரிஷபம்: எதிர்பார்த்த உதவி கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். குடும்பத்தில் அமைதி நிலவும். உடல் அசதி விலகும். பணவரவு உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

மிதுனம்: முகப்பொலிவு கூடும். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வியாபாரம் ஓரளவு லாபம் தரும். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.

கடகம்: சிக்கலான, சவாலான காரியங்களை கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்காது. அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

சிம்மம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர். பயணங்கள் திருப்தி தரும். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்கள்.

கன்னி: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர். தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும். சகோதரர்கள் ஆதரிப்பர். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும்.

துலாம்: புதிய எலட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்குவீர். உறவினர் வருகையால் வீடு களைகட்டும். தம்பதிக்குள் அனுசரித்து செல்வீர். வியாபாரத்தில் இருந்த குழப்பம் நீங்கும். அலுவலகத்தில் விரும்பிய இடமாற்றம் உண்டு.

விருச்சிகம்: சொத்து விஷயத்தில் சகோதரர்களுக்குள் விட்டுக் கொடுத்து போகவும். உத்தியோகத்தில் பணிச் சுமை கூடும். இருப்பினும் உரிய அங்கீகாரம் கிட்டும். வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிக்க போராடுவீர்.

தனுசு: பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தவும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் பங்குதாரர் ஆலோசனைப்படி செயல்படவும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.

மகரம்: தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர். உறவினர் வருகையால் வீடு களைகட்டும். அலுவலகத்தில் விரும்பிய இடத்துக்கு மாற்றல் உண்டு. கடையை பெரிய அளவில் விரிவாக்கம் செய்வீர்கள்.

கும்பம்: மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்றம் உண்டு. அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.

மீனம்: நெடுநாளாக திட்டமிட்டுக் கொண்டிருந்த சில காரியங்களை செயல்படுத்திக் காட்டுவீர். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் உயரதிகாரியின் ஆதரவு கிட்டும். வியாபாரம் சிறக்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x