Published : 18 Mar 2025 06:00 AM
Last Updated : 18 Mar 2025 06:00 AM
மேஷம்: விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி தங்கும். குடும்பத்தினரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கவும். பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். வியாபாரம், உத்தி யோக விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.
ரிஷபம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நட்பு வட்டாரம் விரியும். பிள்ளைகளின் விருப் பங்களை நிறைவேற்றுவீர். வியாபாரம் ஓரளவு லாபம் தரும். அலுவலகத்தில் வீண் விவாதம் தவிர்ப்பீர்.
மிதுனம்: தடைபட்ட காரியங்கள் சுமுகமாக முடியும். உறவினர் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். பிள்ளைகளால் நிம்மதியுண்டு. வியாபாரரீதியாக சில பிரபலங்களை சந்திக்க நேரும். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.
கடகம்: வீண் செலவுகளை தவிர்ப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். பூர்வீகச் சொத்து பிரச்சினை முடிவுக்கு வரும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் அன்பை பெறுவீர். வியாபாரம் சிறக்கும்.
சிம்மம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். அலுவலகரீதியான வெளியூர் பயணங்களால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்.
கன்ன: குடும்பத்தினரால் மனநிம்மதி கிட்டும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபார விஷயமாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். அலுவலகத்தில் இழுபறி யான வேலைகளை முடித்து பாராட்டு பெறுவீர்.
துலாம்: வீடு, வாகனப் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் கிடைக்கும்.
விருச்சிகம்: நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். ஊர் விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
தனுசு: புத்திசாலித்தனமாக நடந்து கொள்வீர். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரியுடனான மோதல்போக்கை தவிர்ப்பீர்கள். வியாபாரரீதியான பயணங்களால் ஆதாயம் உண்டு.
மகரம்: வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடி முக்கிய முடிவுகளை எடுப்பீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவீர்.
கும்பம்: பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புதிய நண்பர்களின் சந்திப்பு நிகழும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் நிம்மதியுண்டு.
மீனம்: முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். எதிலும் ஒரு பிடிப்பற்ற போக்கு இருக்கும். யாருக்காகவும் எதற்காகவும் எந்த உறுதிமொழியும் தரவேண்டாம். வியாபாரம், உத்தியோகத்தில் எச்சரிக்கை அவசியம்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT